பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவம் போம்!

கிஷ்டங்கள் அதிகரிக்கிற போது, கடவுள் நினைப்பு இயல்பாக எழுகிறது மக்களுக்கு, கடவுள் நினைப் பு மனசோடு, வீட்டோடு நிற்கும் படி அவர்களை விடுவது கிடையாது. கீர்த்திபெற்ற மூர்த்திகள் கோயில் கொண் டிருக்கும் திருத் தலங்களுக்கு ஒரு தடவையோ பல தடவையோ, போகும் படி அந்த உணர்வு பலரைத் தூண்டி விடுகிறது. அப்படிப் பட்ட உணர்வினால் அலைக்களிக் கப்படும் எத்தனை எத்தனையோ நபர்களில் அப்பாவி சிவகாமி நாதனும் ஒருவன்.

சிவகாமிநாதன் ‘அதிர்ஷ்டம் இல்லாதவன்” அவனுடைய எண்ணம் இது. அது தனக்கு வாய்த்த பெயரி லேயே காணக் கிடக்கிறதாக ஒரு மனக்குறை என்றுமே அவனுக்கு உண்டு. அது அழகான பெயர்தான்.

ஆனால் எந்த அழகான முழுப்பெயரையும் யாராவது பூரணமாக உச்சரிக்கிறார்களா என்ன? இஷடம் போல் சிதைக்கிறார்களே சிவகாமிநாதனை வாய்நிறைய அந்தப்