பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் . 05

பெயரைச் சொல்லி யார் கூப்பிட்டார்கள்? ஏ. சிவகாமி!’ “பொம்பிளைப் புள்ளெயை கூப்பிடுவது மாதிரிக் கூப்பிடு கிறார்களே என்ற வருத்தம் அவனை அரித்துக் கொண்டிருந்தது.

சில எடக்குப் பேர்வழிகள் ஏட்டி சிவகாமி என்றுகூட அழைத்தார்கள். கிண்டலாகத்தான். ஆயினும், அப்படி அழைப்பதற்கு வசதியாக அமைந்திருந்தது அவன்பெயர். ஏ.டி. என்ற தலை எழுத்து அவன் பெயருக்கு வாய்த் திருந்தது. ஆலம்பட்டி திருவடியா பிள்ளை மகன் என்பதைக் குறிக்க, முதல் எழுத்துக்களை ஆங்கிலத்தில் எழுதிவைத்த தன் வினை அது.

இந்த விதமான சிறுசிறு விஷயங்கள் பலவும் சேர்ந்து பையனுக்கு ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துவந்திருந்தன. அவன் வளர்ந்து பெரியவனாகி, உத்தியோகம் பார்க்க ஆரம்பித்த பிறகும் அந்த மனக்குறை அவனைவிட்டு விலகவில்லை. கல்யாணம் ஆனபிறகும் அது மாறவில்லை. அவனுடைய வாழ்க்கைத் துணைவியாக வந்துசேர்ந்த பாக்கியம் அவனுக்கு மனமாற்றமோ வாழ்வில் பாக்கியமோ கொண்டுவந்தவிடவில்லை.

மாறாக, புதிய குழப்பங்களுக்கும் மனக் குறை களுக்குமே வழிசெய்தாள் அவள். வீட்டில், அவள் உறவில் காணமுடியாத அமைதியையும் ஆனந்தத்தையும் சிவகாமி நாதன் மதச் சம்பந்தமான புத்தகங்களிலும் பிரசங்கங்களிலும் காணமுயன்றான். வாழ்க்கையின் வெறுமையும் வேதனையும் அவனை கோயில்களுக்கு இட்டுச் சென்றன; புண்ணியம் பெற்றுத் தரும் திருத்தலம் எனச்சிறப்புப் பெற்ற ஊர்களுக்குத் தள்ளிச்சென்றன. -

முக்கியமாக ஒரு புண்ணிய rேத்திரம் அவன் மனசுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அங்குள்ள திருமுருகன் சக்தி