பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. மனிதர்கள்?

திடீரென்று தீ பிடித்துக் கொண்டது. குப் என்று பற்றிய தி செந்நாக்குகளை நீட்டி நீட்டிப் பாய்ந்தது. காய்ந்து முருகியிருந்த ஒலைக் கொட்டகையில் குபு குபு என்று படர்ந்து கூத்திட்டது. h

உள்ளே வேடிக்கையாகப் பார்த்திருந்தவர்கள் நிலைமையை புரிந்து கொள்வதற்கு சிறிது நேரம் பிடித்தது.

‘தீ தீ புடிச்சிட்டுது.. கொட்டகை பத்தி எரியுது.

பதறிய குரல்கள் வெளியிலிருந்துதான் வெடித்தன முதலில் தொடர்ந்து உள்ளே தெறித்துச் சிதறின. உடனடி யாகப் பரபரப்பு, பதட்டம், பயபிதி, கூச்சல், ஒலம், அலறல் - குரல்கள் கதம்பமாகிக் குழம்பிப் புரண்டன.

அமைதியாய், ஒழுங்காய், சோம்பல் சுகத்தோடு உட்கார்ந்திருந்த கூட்டம் கலவரமும் பயமும் உயிராசையும் மண்டிக் குழம்பும் மனித மந்தையாக மாறியது. சுய நலம் வெறித்தனமாகத் தாண்டவம் புரியலாயிற்று. நாம் தப்பிப் பிழைக்கனும்... நாம் உயிரோடு தப்பிக்கனும் இதுவே