பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

08 புண்ணியம் ஆம் பாவம்போம்!

வந்திருப்பாய். அதுக்கப்புறம்தான் கோயிலுக்கே போவே. ஊம். என் விதிதான் நான் இப்படி இருக்கிறேனே! என்று அவள் அலுத்துக்கொண்டாள்.

பேச்சுதான் வறட்டுப் பேச்சாக இருந்ததே ஒழிய, அவள் முகம் மலர்ந்து, உதடுகள் சிரிப்பில் நெளிந்து, கண்கள் உணர்ச்சிக் குறுகுறுப்பில் நீந்தி உற்சாகத்தைக் கொட்டிக் கொண்டு தானிருந்தன. .

‘என் ஞாபக சக்தியை வாரியலாலே வெளும் பச் சாத்தணும். தரித்திரம் பிடித்தது! பவானியை மறந்து விட்டதே. இவளிடம் நீ யார் என்று கேட்டிருந்தால், இவளுக்கு எப்படி இருக்கும்? இவள் குத்தலாகப் பேசினால், என் மூஞ்சி செத்துப்போகாதா செத்து?’ என்று அவன் உள்ளம் கண்டனக் குரல் கொடுத்தது. அவன் கண்கள் அவள் முகத்தையும் அழகையும் பருகி மகிழ்ந்து கொண்டிருந்தன.

அதெல்லாமில்லே. நான் சுவாமிதரிசனம் பண்ணி விட்டு’ என்று இழுத்தான் அவன்.

நேரே ரயிலேறிவிடுவே. சனியன் மாதிரி நான் உன்வழியில் குறுக்கிட்டுவிட்டேன். இல்லையா? என்று சொன்ன அவள் குறும்பாகச் சிரித்தாள். . . .

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை.

சரி, இப்போ என் கூடவே வாயேன். வீட்டைத்தேடி அலைகிற சிரமம் மிச்சமாகும். என்றாள் பவானி. -

‘நீ முதல் லே போ: நான் அவசியம் வாறேன். வருவேன்னா வந்துவிடுவேன்’ என்று அவன் உறுதி கூறினான். அவள் வீடு இருக்கும் தெரு, வீட்டு எண் முதலி யவைகளை விளக்கமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டான்.

அவள் சிரித்துக் கொண்டே போய்விட்டாள்.