பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 09

பவானி அவனுக்கு உறவுதான். கிட்ட உறவு அல்ல. சுற்றி வளைத்துப் பார்த்தால், எப்படியோ அத்தை முறை ஆகவேண்டிய ஒரு அம்மாளின் மகள். முன்பெல்லாம் அம்மாவும் மகளும் அவ்வப்போது சிவகாமிநாதன் வீட்டுக்கு வந்து போவது வழக்கம். அவளுக்குக் கல்யாணமான பிறகு பவானி அந்தப் பக்கம் வரவில்லை. அவளைப் பற்றிய செய்திகள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. அவள் மாப் பிள்ளை சரியாக இல்லை, அவளை சரியானபடி நடத்த வில்லை என்று கேள்வி. பிறகு புருஷன்காரன் அவளைத் தள்ளி வைத்து விட்டான், அவள் வாழாவெட்டியாக இருக்கிறாள் என்றும் அவன் கேள்விப்பட்டது உண்டு. அவள் இந்த ஊரில்தான் இருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியாது.

மேலும் அவனுடைய ஞாபக சக்தி வளமானது அல்ல, பார்த்த முகங்களை மறவாது அப்படியே பதிய வைத்துக் கொண்டு, தக்க சமயத்தில் பளிச்சென எடுத்துக் காட்டும் திறமை பெற்றிருக்கவில்லை அது. அதற்காக அடிக்கடி அவன் பட்சாதாபப்படுவது வழக்கம், இப்போதும் தனக்குத் தானே அனுதாபம் கூறிக்கொண்டான் அவன்.

அரை மணிநேரம் கழித்து, அவன் பவானியின் வீடு தேடிப் போனான். அவள் சந்தோஷ மாக வரவேற்றாள், ‘வா சிவகாமிநாதன், வா!’ என்று கூறி. அவள் அப்ப அழைத் ததும், பிறகும் பேச்சில் அடிக்கடி அவன் பெயரை முழுசாக நன்றாக உச்சரித்ததும், அவனுக்குப் பிடித்திருந்தது; மகிழ்வு ஊட்டியது; அவள் பேரில் அவனுக்கு நல்லெண்ணத்தை உண்டாக்கியது. - - . . .

காதிலே கழுத்திலே கைகளிலே எதுவும் இல்லாமல்தான் இருந்தாள் அவள். சாதாரண கைத்தறிப் புடவையே கட்டி யிருந்தாள். மெலிந்துதான் காணப்பட்டாள். ஆயினும் அவள் முகத்தில் சதர் சிரிப்பு விளையாடிக் கொண்டிருந்தது.