பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

+

2

புண்ணியம் ஆம் பாவம்போம்!

வேண்டாமே. நிறையச்சாப்பிட்டு விட்டேன்னு தோணுது என்று அசட்டுச் சிரிப்புடன் சொன்னான் அவன்,

அப்ப பாதி எடுத்துக்கோ. உனக்குப் பாதி, எனக்குப் பாதி என்று பங்கு போட்டாள் பவானி. வேணுமின்னா வாயிலே ஊட்டட்டுமா?’ என்று குரலை இழையவிட்டு, அகன்ற கரிய விழிகளின் பொல்லாத பார்வையினால் அவனைத் தாக்கி, வசியச் சிரிப்பு சிந்தினாள்.

மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அந்த வீட்டிலிருந்து வெளியேறி, கோயிலை நோக்கி நடந்து கொண்டிருந்த சிவகாமி நாதனுக்கு அவையெல்லாம் எப்படி நடந்தன என்று விளங்கிக் கொள்ள இயலாமல் போய்விட்டது. அப்படிப் பட்ட விஷயங்கள் நடந்து முடிந்திருந்தன இடைவேளையில்.

ஆனால் அவனுக்குச் சில விஷயங்கள் புரிந்தன. அன்பு வறுமையினால் ஏக்க முற்றுக் கிடந்த அவன் உடலுக்கும் உள்ளத்துக்கும், பருவ மழைபோல், குளுமையும் புத்துயிரும் ஊட்டின பவானியின் அன்பு உறவும் ஆசையான நடவடிக்கை களும். அவளுக்கும் அவனுடைய துணையும் உறவும் தேவைப்பட்டது. உணர்ச்சிகளின் திருக்கூத்துகள்தான் எல்லாம்: -

“ஒரு கணத்தின் பலவீனம் பிறப்பித்துவிட்ட செயல் அது.

‘புண்ணிய ஸ்தலத்துக்கு வந்து நான் இப்படியா நடந்து கொள்ள வேணும் என்று அவன் மனசின் ஒரு பகுதி குறைகூறியது. -

‘நம்மால் ஆவது எதுவுமில்லை. ஆண்டவன் காட்டிய வழி. அப்பன் முருகன் தான் என்னை இங்கே வரும்படி அழைத்தான். திருமுருகன் திருவிளையாட்டினால் தான் பவானி என் முன் குறுக்கிட்டாள். நான் ஒரு பாவமும்