பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 புண்ணியம் ஆம் பாவம்போம்:

ஆகா! என வியந்து மகிழ்வார்கள். அதே காலத்தில் ஆபீஸ்களில் பணி புரியும் உத்தியோகப் பெண்களில் எவள் எவளை, எவன் எவன் கணக்குப் பண்ணுகிறான், நாமும் எவள்மீது வலைவீசலாம் என்றும் யோசித்து சகாக்களுடன் அவை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். வறண்ட வாழ்க்கையிலே வேறு என்ன ஐயா இருக்கின்றன?

ஆகவே, அனந்தசாமியும் அந்தரீதியில் ஒழுங்காக இயங்கலானான்.

குடியிருந்த வீடு வசதியானது. அவனுக்கு வாய்த்திருந்த மனைவி ஆவரேஜ் பெண்மணி. அதனால், சராசரிப் பெண் களுக்கு இருக்கக்கூடிய விருப்பு, வெறுப்புகள், ஆசைகள், ஏக்கங்கள், எதிர்பார்த்தல்கள், ஏமாற்றங்கள், மனக்குறைகள், கொதிப்புகள் எல்லாம் அவளிடமும் இருந்தன. அவற்றின் பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாகாமலிருப்பதற்காகவும் அனந்த சாமி அதிக நேரத்தை வெளி இடங்களில் களித்தாக வேண்டிய ஒரு அவசியத்தை வளர்த்துக் கொண்டான்.

அவனுக்கு அருளுரை வள்ளல், தேன் பேச்சு அரசு, கதைக் கடல், பக்திப் பெருநிதி, தவத்திரு அன்பானந்த அடிகள்மீது ஒரு அட்மிரேஷன் ஏற்பட்டு வளர்ந்தது வியப்பு மோகமாய், பக்தியாய் கொழுந்து விட்டது. அவர் பேச்சைக் கேளாத நாள் எல்லாம் பிறவா நாளே என நம்பினான் அவன். அவர் புகழ் பாடிப் பரவசம் அடைந்தான். அவருக்குக் காணிக்கைகள் வழங்கினான். அவர் திருமுன் விழுந்து வணங்கி, அவரது அறிமுகம் பெற்று, அவரோடு இரண்டொரு வார்த்தை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பையும் தேடிக்கொண்டான். -

அன்பானந்தருக்கு அவனைப் பிடித்துவிட்டது. அவன் மூலம் அது.இது என்று சில பல சில்லறைக் காரியங்களைப் பூர்த்திசெய்து கொள்ளமுடிந்தது. எனவே அனந்தசாமி