பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

’ : : புண்ணியம் ஆம் பாவம்போம்!

ஒவ்வொரு உருவத்தினுள்ளும் பொங்கிய இயக்கு சக்தியாக அமைந்தது. முண்டியடித்து முன்னேறி, இடித்து நெருக்கி, சாடிச் சமட்டி, சமரிட்டு, குத்தித் தள்ளி மிதித்துத்துவைத்து, எனக்கு வழி எனக்கு வழி: நான் வெளியேறனுமே நான் வெளியேறனுமே நான் தப்பிப் பிழைக்கனுமே என்ற தவிப்போடு படபடத்துக் குழம்பி, குழப்பத்தை அதிகப் படுத்தித் திணறித் திண்டாடியது கும்பல். -

குறுகலான வாசலிலே பெரும் நெருக்கடி, இடித்து மோதல்கள் கூச்சல் கூப்பாடுகள் போராட்டங்கள்.

மனிதப் பிராணிகள் படுகிற அவதிகளை, பீதியடைந்து படுகிற பாடுகளை, பரஸ்பரம் படுத்திக் கொள்கிற வேதனை களை எல்லாம் பார்த்துச் சிரித்துக் கெக்கலிப்பதுபோல் தீ தாவித் தாவிப் பரவியது. செந்நாக்குகள் எட்டிய இடங்களை எல்லாம் தொட்டன. முன்னே முன்னே நீண்டன, சுழன்றன.

தீ தீ என்ற கூச்சல் மேலோங்கி நின்றது. தப்பி வெளியேறப் போராடிய மனிதர்களின் வெறிக்கூச்சல் - பய ஒலம் ஏலாக் குரல், சோக அரற்றல் பயங்கரமாகப் பரவியது.

மனிதர்கள் செயலற்றுப் போன நிலை அங்கே.

பொழுது பேர்க்காக திரைப்படம் பார்க்க உள்ளே குழுமியிருந்தவர்கள் திடீர்த் தீ விபத்தில் சிக்கித் திணறுவதை வேடிக்கை பார்க்கத் திரண்டவர்கள் வெளியே நின்று ஆரவாரித்துக் கொண்டிருந்தார்கள்.

உள்ளே சாவின் துயரக் கூச்சல். வெளியே வேடிக்கை பார்க்கக் கூடியவர்களின் கொக்கரிப்பு. பாதுகாப்பு முயற்சி களில் முனைந்தோரின் பரபரப்பு வேறு. -

எல்லோரையும் அலட்சியப் படுத்தியபடி தீ வெறி வேகத்தோடு வேட்டையாடிக் கொண்டிருந்தது. சினந்து