பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 9

இவ்விஷயம் மெதுமெதுவாக அனந்தசாமி காதிலும் புகுந்தது. “சீ என்ன மனிதர்கள் சாக்கடைப் புழுக்கள் இவர் களுக்கு சாக்கடைப் புத்திதானே இருக்கும்? என்று நொந்து கொண்டான்.

இப்படியாகக் காலம் ஒடிக் கொண்டிருந்தது.

இந்தக் கதை நிகழும் சந்தர்ப்பத்தில், அனந்தசாமியின் வீட்டில் யாரும் இல்லை. மனைவியும் குழந்தைகளும் ஊருக்குப் போயிருந்தனர். அவ்வட்டாரத்தில், ஒரு சபாவில், அடிகளின் சிறப்புச் சொற்பொழிவுக்கு ஏற்பாடாகியிருந்தது. அவன் சீக்கிரமே போய் விட்டான். அடிகள் அவனிடம் அன்பாகப் பேசினார். அவனுட்ைய சேம லாபங்களை விசாரித்தார். குடும்பம், வீடு, வருவாய், வாழ்வு பற்றி எல்லாம் பரிவுடன் கேட்டார்.

ஆங், இப்ப வீட்டிலே யாரும் இல்லையா? வீடு வசதியான இடம்னா சொல்கிறே? என்றும் கேட்டு வைத்தார்.

அன்று அடிகளின் சொற்பொழிவு பிரமாதமாக இருந்தது. வழக்கத்தைவிட அதிகமான நேரம் பேசினார். வைரமும் தங்கமும் பட்டுமாய் மின்னிய மாதரசிகள் சபையில் பாதிக்கு மேல் இருந்ததுதான் இதற்குக் காரணம் என்று சில குறுகிய நோக்கர்கள் கூறினார்கள்.

இந்தக் கூட்டத்துக்கு சூரிய காந்தம்மா வந்திருப்பதும், அவள் மிகப் பிரமாதமாகத் திரட்டுப்பால் தயாரித்துக் கொண்டு வந்து அடிகளுக்கு உதவியதும் அவருடைய உற்சாகத்தைத் தூண்டியிருக்கலாம் என்று விஷயம் அறிந்த” வம்பர்கள் பேசிக்கொண்டார்கள்.

‘இப்படி எல்லாம் அம்மாளுக அன்பையும் அமுதத் தையும் வாரி வாரி வழங்குகிற போது அன்பானந்தர் கட்டை விடாமல் வெண்கலச்சிலை மாதிரி இருப்பதில் வியப்பு