பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20* புண்ணியம் ஆம் பாவம்போம்:

எதுவும் இல்லை தான். அவருக்கு அடுத்த வருஷம் மணிவிழாவாமே? ஆளைப் பார்த்தால் அறுபது வயசு ஆசாமி மாதிரியா தெரியுது? சரியான உண்டுருட்டன்காளை என்றார் ஒருவர்.

அவ்வளவும் நெய் ஐயா நெய்யி பாலு, பாதாம், தேன் வகையராவும் உண்டு!” என்று விளக்கினார் இன்னொருவர்.

ஊர் என்றால் நாலு பேர் நாலு சொல்லாமல் இருப் பார்களா? இஷ்டம்போல் பேசினார்கள்.

‘மடையன்கள்!’ என்று அவர்களைப் பற்றி முடிவு கட்டினான் அனந்தசாமி.

“அப்பனே அனந்தசாமி!’ என்று அடிகள் அவனை அருகழைத்தார்.

அவன் பக்தி பரவசத்துடன், பணிவோடு, அவரருகில் சென்றான்.

‘உன் வீட்டில் யாரும் இல்லை அல்லவா? இன்று ராத்திரி நான் அங்கு தங்கியிருப்பதில் உனக்கு ஆட்சேபனை எதுவும் இராதே? என்று அடிகள் கேட்டார்.

‘உங்கள் விருப்பம் என் பாக்கியம்’ என்றான் பக்தன். முன்னாடியே வீட்டுக்குப் போய், அவர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

அடிகள் எழுந்தருளப் பதினோரு மணிக்குமேல் ஆகிவிட்டது. ஒரு காரில் வந்து இறங்கினார். அவரோடு சூரியகாந்தம்மாளும் வந்து இறங்கினாள். அவள் காராகத் தான் இருக்க வேண்டும் அது.

இவங்க ஏன் கூடவே வாறாங்க என்ற அனந்தனின் மனம் கேள்வி எழுப்பியது. அது அநாவசியமான கேள்வி என்று அவன் அடக்கிவிட்டான்.