பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|S புண்ணியம் ஆம் பாவம்போம்

பிள்ளை மாமாயில்லா? எப்பவும் நம்ம வீட்டுக்கு வாறவங்க தானே. இப்போ ஏன் வ்ரவேண்டாம்னு கத்துதே? என்றார்கள். அந்த ஆள் யாரோ ஒரு பைத்தியக்காரனாய். பிச்சைக்கு வந்த நபராய், எனக்குப்பட்டது ஏன்? அநேக முறைகள் கண்டு பேசிப் பழகிய ஒரு நபர் அன்று, பட்டப்பக லில் நல்ல வெளிச்சத்தில். எவனோ ஒரு அந்நியனாய் என் பார்வையில் திரிந்து தோன்றியது ஏன்? நான் எதற்காக அப்படிக் கூச்சல் போட்டேன்? எனக்குத் தெளிவாகப் புரிய வில்லை - அன்றும். இன்றும்கூட

பைத்தியத்தின் வித்துஅன்றே என்னுள் உறைந்திருந்தது போலும்! *

இதைவிட விசித்திரமான, ஆனால் இதே போன்ற, இன்னொரு நிகழ்ச்சி - -

சிற்றுரர்கள் செல்லும் பஸ் ஒன்றில் நான் இருந்தேன். ஏகப்பட்ட கூட்டம். நல்ல வெயில் வேளை. பஸ் வேகமாக ஒடுகிறது. காற்று சுகமாக வீசியது. சிலர் இரைந்து பேசிக் கொண்டிருந்தார்கள். கண்டக்டர் ஏதோ கத்தினான். எனக்குத் துக்கம் என்று சொல்வதற்கில்லை. நல்ல விழிப்பு நிலையில் இருந்தேனா? தெரியவில்லை. இருந்திருந்தால், அப்படி நடந்து கொண்டிருக்கமாட்டேன் என்று எனக்கு அப்புறம் தோன்றியது. அதை எண்ணுகிறபோதெல்லாம் இந்த நினைப்பு எழும். பஸ்ஸுக்குள்ளேயே பெருத்த சண்டை ஏற்பட்டு விட்டதாகவும், யாரோ யாரையோ வைது தாக்கு வதாகவும், கண்டக்டர் கையாலாகாத்தனமாய் கத்திக் கொண்டிருப்பதாகவும் எனக்குத் தோன்றியிருக்க வேண்டும். நான் திடீரென்று ஹோல்டான்! ஹோல் டான்’ என்று கத்தினேன். பஸ் நிற்காமல் ஒடவும். பயந்து பதறி மேலும் நிறுத்துங்க. பஸ்ஸை நிறுத்துங்க! என்று சத்தம் போட்டேன். பஸ் நின்றது. பலரும் என்னைப் பார்த்தார்கள். கண்டக்டர்.