பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் >

சிரித்தது. சீறி விழுங்கியது. தப்பியவர்களை தப்ப விட்ட ஆங்காரம் மீதுற, தப்ப முயன்றவர்களைப் பற்றிச் சுவைக்கத் துடிப்பது போல் துள்ளிப் பாய்ந்தது. சுழன்றது. பரவியது. பெருகியது. இரைச்சலிட்டது. ஒளி பாய்ச்சியது. ஓங்கி ஓங்கி வளர்ந்தது.

உயிருக்குப் போராடிய மனிதர்களின் பரபரப்பும் பாய்ச் சலும், முண்டியடித்தலும் முட்டி மோதலும், விழுதலும் எழுதலும் வெளியே பாய்ந்து ஓடுதலும், வெறி வேகமும் மூர்க்கத்தனமும் குருட்டு இயக்கமும பெற்றிருந்தன. நான் தப்பிப் பிழைக்கணும்... எப்படியும் வெளியே போகணும். இதுவே ஒவ்வொரு உருவத்தினுள்ளும் இயங்கிய உந்து சக்தியாயிற்று. ‘. . .

மூங்கில்கள் வெடித்தன. ஒலைகள் எரிந்து, சரிந்து, உள்ளே விழுந்தன. பக்கத்தட்டிகள் பற்றி எரிந்தன. தீக்கு நல்ல கொண்டாட்டம். குறும்புத் தனமாக விளையாடியது. ஆண்கள், பெண்களின் உடைகளைச் சீண்டியது. உடம்பைத் தொட்டு ருசித்தது. *

உயிர் தப்ப விரைவோர் குருட்டு வேகத்தோடு பாய்ந் தனர். தீயிடமிருந்து தப்ப முண்டி முன்னேறினர்.

வாசல் வழி வெளியே வந்தவர்களைப் பார்த்து ஒ ஒ என்று ஆரவாரித்தது. வெளியே வேடிக்கை பார்த்து நின்ற மனிதக்கும்பல்.

பதறியடித்துப் பாய்ந்து வந்தது ஒரு பெண் உருவம். தீ சுவைத்த சீலையை பீதியோடு உதறி எறிந்து, மேலே தீயாய் சிரித்த ஜாக்கெட்டைப் பிய்த்து எறிந்து, பேய் மாதிரி வந்தாள் ஒருத்தி. ‘நான் தப்பணுமே தப்பிப் பிழைக்கனுமே! இது தான் அவளது உள்ளத்தின் மந்திர உச்சாடனமாக அமைந் திருக்கிறது.