பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 புண்ணியம் ஆம் பாவம்போம்!

இவள் எவளோ ஒருத்தி. தெரியாதவள்! அவள் ஏசிக் கொண்டே நடந்தாள். ஆளைப் பார்க்கையிலே நல்லவன் மாதிரித்தான் தோணுது. அயோக்கியத் தனம் அவன் பேச்சிலும் சிரிப்பிலும் தெரியுதே. என்னன்னு கேட்டால், கையைப் புடிச்சு இழுத்திடுவான் போலிருக்கு தெருவிலே ஆள் நடமாட்டமே இல்லை அல்லவா? இவனுக்குத் துணிச்சல் வந்திருக்கு யாரும் எதிர்ப்பட்டு, அவள் பேச்சைக் கேட்டு, அநேகரைக் கூட்டிக்கொண்டு, என்னை மடக் குவதற்கு முன்னால் நான் அங்கிருந்து போய்விட வேண்டும் சாமியே கடவுளே என்று எண்ணி, வேகமாக நடந்து ஒரு சந்தில் புகுந்து, வேறொரு தெருவில் சேர்ந்து, பெரிய தெருவை அடைந்தேன். மடத்தனம், சுத்த மடத்தனம் என்று என் மனமே குறை கூறியது.

இதுபோன்ற சமயங்களில் பொம்பிளைகள் என்ன வேண்டுமானாலும் சொல்லத் தயங்கமாட்டார்கள்; அவர்கள் என்ன சொன்னாலும் எல்லோரும் பொம்பிளைகள் பேச்சையே நம்புவார்கள் என்பது எனக்குத் தெரியும். ஒரு சமயம், எனக்குத் தெரிந்த ஒருவன், கோயிலுக்குப் போய்க்கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்து அவள் அவனுக்குத் தெரிந்தவன் தான் - என்ன. பூ வேணுமா? என்று கேட்டு வைத்தாள்.அவள், ஐயோ பைத்தியம் என் தலையிலே பூ வைக்க வருது என்று கூச்சலிட, அநேகர்கூட, என்ன ஏது ஏன் என்று எதுவும் கேட்காமலே அவனை மொத்து மொத்தென்று மொத்த, அவன் அன்று உயிர்பிழைத்தது அவன் பெற்றோர் செய்திருந்த பூஜாபலன்தான்! அது போன்ற ஒரு நிலை எனக்கு ஏற்படாமல் நான் தப்பிவிட்டதும் என் முன்னோர்கள் செய்த தவப்பயனால்தான்!

விசித்திரமான நினைப்புகளும் விபரீதமான எண்ணங் களும் என் மண்டைக்குள் ஓயாது குறுகுறுத்துக் கொண்டிருக் கின்றன.