பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 129

அழகான சிறு குழந்தையைக் கண்டால் அதைக் கண்டு மகிழாமல், அம்மை கண்டு அந்தப் பிள்ளை எப்படி அழகு குலைந்து காண்ப்படும் என்று ஒரு சித்திரத்தைத் தீட்டி மகிழும் என் மனம்.

யாருக்காவது சீக்கு வந்தால், அவர் குணமாகி எழுவார் என்று நம்புவதற்கு மாறாக, அவர் செத்துக் கிடப்பதையும் ப லபேர் அழுவதையும், பாடை தயாரிக்கப்படுவதையும் தத்ரூபமாகக் கண்டு களிப்படையும் அது.

ஒருவன் வெளியே போனான்; வீடு திரும்பக் காணோம்; ரொம்ப நேரமாச்சு என்று யாராவது பேசக் கேட்டால், அந்த நபர் எங்கோ ஓரிடத்தில் லாரியால் மோதுண்டு நசுங்கி மண்டை பிளந்து கிடப்பதையும். ரத்தம் ஒடிக்கறை படிந் திருப்பதையும் பளிச்செனக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி உற்சாகம் கொள்ளும்அது. -

நான் ரஸ்தாவில் நடக்கிறேன். அகன்ற வீதியைக் கடக் கிறேன். பஸ் வருகிறது. மோதுகிறது. சர்ரக். பிரேக் ஒலி. சதக் என் உடலின் ஏதோ ஒரு பகுதி நசுங்குகிறது. கும் பல் கூடுகிறது. பலவித சத்தங்கள். பரபரப்புகள் - இப்படி என் மனம் படம் பிடித்துக் காட்டாத நாள் அதன் கணக்கில் வீணான நாளே!

நெடுந்துரப் பயணத்தில் நான் துரித ஒட்ட் நீராவித் தொடர் வண்டி"யில் செல்லும் போதெல்லாம், பாலங்கள் உடையும், என்ஜின் ஆற்றில் விழும், வண்டிகள் தடதட வென்று சரியும். அல்லது, வேறு விதமான கோரவியத்துக்கள் நிகழும். பிணங்கள் கணக்கில. காயம் பட்டோர் எண்ணிலர். நானும் என் மனசின் மூடுக்கு ஏற்ப. காயம் பட்டோ பிணமா கவோ கிடப்பது பழக்கம். நான் புறப்பட்ட இடத்தில் இருப்ப வர்களுக்கும் போய்ச் சேர வேண்டிய ஊரில் உள்ளவர்க ளுக்கும் இது தெரியாது. நான் சுகமாக இருப்பதாக அவர்கள்