பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் • 131

பெரிய மைதானத்தின் நடுவிலே தனியே நிற்கும் என்னை, கொடுரமான கருஞ்செவலை மாடு ஒன்று தாக்கி, முட்டித் தள்ளுவதற்காகப் பாப்கிறது. நான் வெறும் கால்களால் அதை அடித்து விரட்ட முயல்கிறேன். ‘போ போ என்று கத்துகிறேன்.

குட்டி யானை ஒன்று, தன் கண்களை உருட்டி விழித் தவாறு, (அப்படி அது முழிக்கிறபோது ஒரு ஒளி பளிச் பளிச் என மின்ன) சிரித்துக் கொண்டே என்னைத் துரத்துகிறது. அதன் பிடியில் அகப்படாமல் தப்பி ஓட முயன்றும் , முடியாமல் கூச்சலிடுகிறேன்.

என்னை ஒருவன் ஒரு அறைக்குள் அழைத்துச்சென்று, ஒரு மூட்டையைக் காட்டி, இதைத் தூக்கு என்கிறான் நான் துக்கவும், அது என் நண்பன் ஒருவனின் சவமாகக் காட்சி அளிக்கிறது. பல்லிளிக்கிறது. நான் பதறி, அதைக் கீழே போட்டுவிட்டு வெளியே ஒடப் பார்க்கிறேன். கதவு மூடப் பட்டுக் கிடக்கிறது. என்னை இட்டு வந்த ஆளைக் கானோம். பேய்த்தனமான சிரிப்பு கேட்கிறது. நான் பயந்து கூப்பாடு போடுகிறேன்.

கடல் மணலில் இருக்கிறேன். கடல் பேரார வாரத்தோடு பொங்கி எழுந்து, யானை உயரம் பனை உயரம் அலைகளை iசிக்கொண்டு முன்னேறிப் பாய்கிறது. நான் எழுந்து தப்பியோட முயல்கிறேன். அலைகள் என்னை விழுங்க வருகின்றன. நான் ரஸ்தாவுக்கு வந்துவிட்டேன். பெரிய அலை ஒன்று வந்து என் காலைப் பற்றி இழுக்கிறது ஒகோகோ என உறுமுகிறது. நான் விழுகிறேன். கதறுகிறேன்.

இதுபோல், இன்னும் பயங்கரமான விழிப்புற்றதும்

தெளிவாக நினைவுக்கு வராத - கனவு அனுபவங்கள். அந்த வேளைக் கு நிஜமாகவே நிகழ்வன போன்ற உணர்ச்சி