பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 135

சஞ்சரிக்கும் தனிப் பிறவிகள் போல் அல்லவா நடந்து கொள்கிறார்கள் என்ன சிரிப்பு எவ்வளவு குதூகலம்!

விநாயகமூர்த்தி பெருமூச்செறிந்தார்.

எல்லை இலாது பரந்து கிடந்து இயற்கையின் ஊதாரித் தனத்தை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் மாகடலின் நீலமோ, அதனோடு போட்டியிடுவது போல் வியாபித்துள்ள வானத்தின் நீலமோ, மணல் வெளியின் வெறிச்சிட்ட தன்மையோ, பிறவோ, அவருடைய பார்வையை, கவனத்தை, எண்ண ஓட்டத்தை வெகுநேரம் பிடித்து, வைத்துக் கொள்ள இயலவில்லை. நீலத்துகில் அணிந்து, கனகாம்பரம்சூடி, கவர்ச்சியாக விளங்கிய சுந்தரி அருகில் அசைந்து நகர்ந்த இளைஞன் மீது இடித்துக் கொண்டு விலகியும் மீண்டும் ஒட்டியும், ஏதோ பேசிச் சிரித்தவாறு அதி குறி அசைந்த கோலக் காட்சியே அவர் கண்களை நிறைத்தன; உள்ளத்தில் அரிப்பு உண்டாக்கின.

கொடுத்து வைத்தவன் என்ற எண்ணம் புகையும் அவர் உள்ளத்துள் நெளிந்து கொடுத்தது.

விநாயகமூர்த்திக்கு ஐம்பத்து நான்கு அல்லது ஐம்பத்து ஐந்து வயசிருக்கும். அவர் ஜன சமுதாயக் காட்டிலே தனி மரமாகத்தான் இருந்தார். ‘ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல’ என்று எண்ணித்தானோ என்னவேர் அவர் ‘எங்கள் ஊர் என்று எந்த ஊரையும் சொந்தம் கொண்டாடவில்லை. சொந்தக் காரர்கள் என்று யாரையும் ஏற்றுக்கொள்ளவுமில்லை. எந்தெந்த ஊரில் எல்லாமோ வசித்துப் பார்த்துவிட்டு, நாகரிகமும் ஜனப்பெருக்கமும், அர்த்தமற்ற அவசரமும் ஆழமற்ற பரபரப்பும் மிகுந்திருந்த பெருநகரத்துக்கு வந்து சேர்ந்த அவருக்கு அச்சூழ்நிலை பிடித்துவிட்டது. எப்படி எப்படியோ வாழமுயன்று, ஆசைக்கோட்டைகள் கட்டி, கனவுகள் வளர்த்துவந்த அவரது சுபாவத்துக்கு உகந்த