பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 புண்ணியம் ஆம் பாவம்போம்!

இடமாக அமைந்தது அது. அஞ்ஞாத வாசத்துக்கு அருமை யான இடம் என. அவர் மனம் அங்கீகரித்துவிட்டது. நம்மை இன்னார் என்று பிறர் அறிந்து கொள்ள முடியாது. அவர்களை நாம் கவனிக்கிறோம் என்பதை மற்றவர்கள் உணர் வதுமில்லை. ஆகவே, எல்லாரையும் எல்லாவற் றையும் அதாவது உலகத்தையே, ஆராய்ந்து அறிவை விசாலப் படுத்திக் கொள்வதற்கு இதுதான் தகுந்த இடம் என்று அவர் முடிவு செய்தார். - -

அறிவை விரிவு செய்து, அகண்டமாக்கி, அனுபவ ஞானம் பெறும் ஆர்வத்திலேயே அவர் அலைந்து திரிந்ததால், சதா புத்தகங்கள் - எழுதும் காகிதம். பேனா என்று உறவாடிக் களித்ததனால், சராசரி மனிதர்களைப் போல அவர் வாழவில்லை. குடும்பம், மனைவி, மக்கள் என்பதெல்லாம் வீண் தொல்லைகளுக்கும் எல்லையில்லாக் கவலைகளுக்கும் முடிவற்ற பொறுப்புகளுக்கும் தம்மை ஆளாக்கி விட்டுவிடும் என்று கருதியதனால் அவர் தனிநபராகவே காலம் கழித்தார்.

காலம் அவரை அறியாமலே அவரிடம் கேட்டு விடை பெற்றுக்கொள்ளாமலே ரொம்பவும் ஒடி சில மாற்றங்களைப் புகுத்தி வந்திருப்பதை அவர் நின்று கணிக்கவில்லை. அப்படிக் கணிப்பதற்கு அவருக்கு நேரம் இல்லை! ஆயினும், வயசு அதிகமாக ஆக அவர் ஒருவித வெறுமையை உணர முடிந்தது. விரக்தி மனோபாவம் வலிமைபெற்றது. தம்மைச் சுற்றிலும் வளர்ந்து வருகிற மக்கள் கூட்டத்தைக் காணுகிற போது, பழைய நபர்களின் முதிர்ச்சியை, இளையவர்களின் வளர்ச்சியை, புதிய புதிய பிறவிகளின் மலர்ச்சியை வளப்பத்தை எல்லாம் காணக் காண, அர்த்தமற்றது என்றும், சாரமற்றது பயனற்றது. வறண்டது என்றும், தாம் வெறுத்து விட்ட வாழ்க்கையில் எங்கோ பொதிந்துகிடந்த சாரத்தை சத்தை, ஜீவரசத்தை, பசுமையை உணர அவர்தான் தவறி விட்டார் என்றொரு உறுத்தல் அவருள் தைக்கலாயிற்று.