பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் | 137

அத்துடன் ஒரு ஏக்கம் வளர்ந்தது. சூழ்நிலையையும் சுற்றியுள் ளவர்களின் போக்குகளையும் கவனிக்கக் கவனிக்க அவரையே அரித்தது அவர் உணர்வு. -

விநாயகமூர்த்தி வாழ்க்கையில் செய்த மகத்தான தவறு, அவர் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவையே பெரிதாய், ஆதார சக்தியாய், தனிப்பெரும் தத்துவமாய் வழிபட்டு அறிவு பூர்வமாக வாழ முயன்றதுதான். அறிவின் பக்தராக வாழ்கின்ற காலத்திலேயே அவர் உணர்ச்சிகளுக்கும் போதிய கவனிப்பு கொடுத்து அவற்றை திருப்தி செய்தி ருந்தால், அவரது பலவீன கட்டத்தில் உணர்ச்சிகள் அவரை மேய்த்து ஏற்றம் கொள்ள முற்பட்டிரா. ஆனால் அவர் உணர்ச்சிமயமான வாழ்வை அற்பமானது, மட்டமானது, மிருகத்தனமானது என்றல்லவோ ஒதுக்கியிருந்தார்? உணர்ச்சி பூர்வமாக வாழ்ந்து கொண்டிருந்த சராசரி மனிதரை உயர் வாழ்வு வாழக் கற்றுக்கொள்ளாதவர்கள் முதிரா அறிவினர் என்றல்லவோ அவர் மதிப்பிட்டார்? -

அவருடைய அறிவுப்பசி மந்தமுறுகிற சந்தர்ப்பங்களில், நிறைவேறாது - திருப்தி செய்யப்பொறது அவருள் ஒடுங்கிக் கிடந்த உணர்வுகள் துடுக்குத் தனமாகத் துள்ளாட்டம் போடுவது சகஜமாயிற்று.

இப்போதும் அப்படித்தான்.

தங்கள் உணர்ச்சிக் களிப்பிலே சூழ்நிலை மறந்தவராய். தொட்டும் பிடித்தும், இடித்தும் தள்ளியும், தட்டியும் தடவியும், பரஸ்பரம் பார்த்தும் மகிழ்ச்சி வளர்த்தவாறு நடந்து கொண்டிருந்த யுவனும் யுவதியும் விநாயக மூர்த்தியின் சபல உணர்ச்சியை ஊதி விடும் விசிறிக் காற் ஆக விளக்கினர். - -

‘எனக்கும் ஒரு காதலி கிடைத்திருந்தால், பொழுது இன்பமயமாக மாறுமே!’ என்றொரு நினைப்பு ஊர்ந்தது