பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 புண்ணியம் ஆம் பாவம்போம்:

வெளியே நின்றவர்களுக்கு எதிர்பாராத வேடிக்கை

• -

‘ஏய் அம்மணக்குண்டிப் பொம்பிளை-ஏஹே, முண்டக்

கட்டை பொண்ணுடோய்...” :

அவிழ்த்துப் போட்டுவிட்டு ஆடுவதை பணம் கொடுத்துப் பார்க்கப் பறவாப் பறக்கும் சுபாவத்தினர் சும்மா கிடைக்கிற காட்சியை ரசிக்காமல் விட்டு விடுவார்களா? சூழ்நிலை, சமய சந்தர்ப்பம்? ஆங், அதுகளை கவனிக்க இதுவா நேரம்? .

வெளியே முண்டி நெருக்கியது கும் பல் ஆடையற்ற பெண் உருவத்தைக் கண்ணாறக் காண்பதற்காக உற்சாகக் கூச்சல் வேறு. ஒகோய் ! டோடோய் என்ற பரிகாசக் கூவல்கள். ---

வேட்டை நாய்களிடையே அகப்பட்டுக் கொண்ட அப்பி ராணி முயல் மாதிரி விழித்தாள் அவள். திகைத்துத் திண்டாடினாள்.

அம்மனக் குண்டி டோடோய் ஆட்டாம் புழுக்கை டோடோப்! தென்னமரத்திலே தேரோட்டம் திரும்பிப் பார்த்தா நாயோட்டம்! -

எவனோ ஒரு வீணன் நெடுங் குரலில் கத்தினான். விசிலடித்துப் பழக்கப்பட்ட வீணர்கள் உய். உய் - உப் என்று வாயினால் சீட்டி அடித்தார்கள். கெக்கலித்தனர் பற்பலர்.

வெளிச்சத்தைக் கண்டு மிரண்ட முக்குறு மாதிரி அவள் செயல் திறம் இழந்து திகைத்து நின்றாள். உந்தித் தள்ளிய உயிராசைமழுங்கி விட்டது. இப்போது உடலில் ஊறியிருந்த மான வெட்க உணர்வுகள் வலுவாக இயங்க, அவள் நாணிக்