பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 புண்ணியம் ஆம் பாவம்போம்:

அவர் உள்ளத்தில். அந்த எண்ணம் கிளப்பிய பெருமூச்சுப் புகையிலே செல்லம்மாவின் உருவெளித்தோற்றம் நிழலிட்டது.

தீக் கொழுந்துபோல் தகதகத்தாள் செல்லம்மா, அழுத் தமான வர்ணப் புடவைகளையே விரும்பி அணிந்த குமரி, குறுகுறுக்கும் விழி வண்டுகள் சதா மொய்ப்பதற்கு வாலிபர் கும்பலை நாடிக்கொண்டிருக்கும். எப்போதும் ஜம்மென்று சிங்காரித்துக் கொண்டு, வீட்டுக்கும் வாசலுக்கும் ஆயிரம் தடவை நடப்பதும், தெருவாசலில் போஸ் கொடுத்து நிற்பதும்தான் அவளது தொழிலாகவும் பொழுதுபோக்கு ஆகவும் அமைந்திருந்தன. -

விநாயகமூர்த்தி வசித்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடியிருந்தாள் அவள், தாயாருடனும் தம்பியோடும். பக்கத்து வீட்டிலிருந்த வாலிபன்மீது அவள் பார்வை வீச்சுப் படராமல் இருக்குமா? பார்த்தாள். சிரித்தாள். தம்பியை அனுப்பி, கதைப் புத்தகங்கள் இரவல் கேட்டாள். ஒன்றிரண்டு புத்தகங்கள் பெற்ற பிறகு, காதல் கதை உள்ள புத்தகங்களாக இருந்தால் தான் எனக்குப் பிடிக்கும் என்று அவளே அவனிடம் அறிவித்தாள்.

சங்கோஜ சுபாவம் மிகுதியாகப் பெற்றிருந்த விநாயக மூர்த்திக்கு அந்தப் பெண்ணின் பேச்சும் சிரிப்பும் செயல்களும் ஊக்கமோ துணிச்சலோ தரவில்லை. வெட்கமும் ஒருவித அச்சமும்தான் அவரைப் பற்றிக் கொண்டன. அப்போது அவருக்கு இருபத்திரண்டு வயசு இருந்திருக்கலாம்.

வேறொருவன்ாக இருந்தால் செல்லம்மா அலைந்த அலைச்சலுக்கு, என்னென்னவோ செய்திருப்பான். சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக்கொண்டு வாழ்வின் இனிமைகளை நுகர்ந்திருப்பான் என்று பிறகு அவரே அடிக்கடி எண்ணிப் பெருமூச்செறிவது வழக்கமாகிவிட்டது.