பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 புண்ணியம் ஆம் பாவம்போம்!

குளி யான விநாயக மூர்த்தி, அந்த இடத்தில் தங்கியிருந்தால் ஆபத்து என்று அஞ்சி, அன்று மாலையிலேயே ஊர்சுற்றக் கிளம்பிவிட்டார். பல ஊர்களுக்கும்போனார். அவர் திரும்பி வருவதற்குள். செல்லம்மாளுக்குக் கல்யாணம் முடிந்து அவள் கணவன் வீடு சென்றிருந்தாள். ‘நல்ல காலம் என்று நிம்மதியாக மூச்சுவிட்டார் விநாயகமூர்த்தி.

விவேகானந்தர், ராமதீர்த்தர், சிவானந்தர் முதலிய ஸ்வாமிகள் போதனை நூல்களை அவர் விரும்பி விரும்பிப் படித்துக் கொண்டிருந்த காலம் அது. ஆகவே, ஒரு பெண் ணின் துணிச்சலான காதல் செயலை வெறுத்து ஒதுக்கி, தன்னைத் தற்காத்துக் கொண்டதைப் பெரிய சாதனை என்றே விநாயகமூர்த்தி அந்நாட்களில் பெருமையோடு கருதினார். ஆனால், காலப்போக்கில் உணர்ச்சிகள் குழப்பும் அவர் உள்ளமே அவரைக் குறைகூறியது. அவர் செயலை அசட்டுத் தனம், பைத்தியக்காரத்தனம், முட்டாள்தனம் என்று கடுமையாக விமர்சிக்க லாயிற்று. செல்லம்மாவோடு காதல் உறவு கொண்டு இளம்பருவ நாட்களை தெய்வ நாட்கள் ஆக மாற்றியிருந்திருக்கலாம். அவளையே கல்யாணம் செய்து கொண்டிருக்கலாம் என்று ஏக்கத்தை அது வளர்க்கலாயிற்று.

கடலோரத்தில் அலைகளை வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்துவிட்ட நீலப் பூந்துகில் மங்கையும் அவள் அன்பனும் விநாயகமூர்த்தியின் கண்களை விட்டு அகல ‘வில்லை. ‘இவள் செல்லம்மாவைப் போலவே இருக்கிறாள்

என்றது அவர் மனம்.

பொதுவாக மனித மனமே விசித்திரமான ஒரு தத்துவம் என்றால், விநாயகமூர்த்தியின் மனம் அதி விசித்திரமானது என்றே சொல்ல வேண்டும். வக்கிரமானது என்றும் கூறலாம். இல்லையெனில், சம்பந்தமில்லாமல் தேவை இல்லாமல் எதையாவது நினைவுக்குக் கொண்டு வந்து குழப்பம் உண்டாக்குமா என்ன? - -