பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 புண்ணியம் ஆம் பாவம்போம்!

பார்த்துக் கொண்டிருந்தார். அவளோ அப்படியே அவர் அருகில் கட்டில்மீது அமர்ந்து, அவர் மேல் சாய்ந்து, முகத்தின் மேல் முகம் வைத்தாள். அவர் படபடப்போடு, அவளை விலக்கித் தள்ளிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார். “சீ போ! வெட்கமில்லே? என்ன வேலை இது? என்று சீறினார். அவள் பயந்து விலகி அங்கிருந்து ஓடினாள். --

அப்படி அவள் ஓடுகிறபோது அவள் பின்னழகு மேனி வளத்தை, அங்கு நிகழ்ந்த அசைவு நாட்டியத்தை, அவர் ரசிக்கத் தவறவில்லை. இதை அவர் உள்ளம் பிற்காலத்தில் அடிக்கடி எண்ணி ஏங்குவது வழக்கமாயிற்று. பெரிய பீஷ்ம அவதாரம் மண்டுகம் தேடி வரும் இன்பங்களைச் சுவைத்து அனுபவிக்கத் தெரியாத பதார்த்தம்’ என்று அவர் மனசின் ஒரு பகுதி காரித்துப்புவதும் சகஜமாகிவிட்டது.

ஈரத்துணி ஒட்டிய வளமான பெண் உடல் துள்ளிக் குதித்தோடுகிற எழிலைப் பின்பக்கமிருந்து பார்த்து ரசிக்கும் நினைப்புதான் இவ்வேளையில் அவருள் எழுந்தது. அவள் வாழாவெட்டியானவள், நண்பருக்கு ஏதோ ஒரு வகையில் உறவு என்பதை அவர் மறுநாளே புரிந்துகொண்டார். அப்போது, தமது புலனடக்கத்துக்கு மற்றுமொரு வெற்றி என்று இறுமாந்துபோன அவர் உள்ளம்தான் காலப் போக்கில் வேறு விதமாக அரிக்கத் தொடங்கியது. அதே நினைப்புதான் இப்பவும் அவர்மனசில் ஊர்ந்தது. -

‘புத்தி கெட்ட தனமாக நடந்து கொண்டேன். மகாப் பெரிய ரிஷிமாதிரி. பெரிய பெரிய ரிஷிகள்கூட சில சமயங் களிலே தங்கள் உணர்ச்சியின் ஆளுகைக்குத் தலைவணங்கித் தான் போயிருக்கிறார்கள். நான் அவர்களைவிடப் பெரிய சூரன் மாதிரி நடந்துகொள்ள ஆசைப்பட்டது தப்பு இல்லாமல் என்ன? வசதியான அறை இருந்தது. உணர்ச்சித் துடிப்புள்ள பெண் கனிந்த கனிபோல் கையில் வந்து விழுந்தது. நான் அதைப் புறக்கணித்தது மடத்தனம்'