பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 45”

இடத்துக்கு வந்துசேர்ந்த தேவகி, ஸ்டைலாக வெளிச்சமிட்டு ஜம்னு இருக்குது இல்லை? ஜோராக இல்லை?” என்று கேட்டாள். மேலாடையை நழுவவிட்டு, எடுப்பாக நிமிர்ந்து வளைந்தும் குனிந்தும் அழகு எக்ஸிபிஷனாக விளங்கியவள். அவரை விதம் விதமானப் பார்வைகளால் கொத்தினாள். முடிவில், நீ ராஜா நான் ரோஜா என்று கொஞ்சும் குரலில் கூறி அவர் கன்னத்தைச் செல்லமாகத் தட்டிவிட்டு வெளியேறினாள். -

இப்படி அவள்ஆடிய ஆட்டங்கள் எத்தனையோ! நாற்பது வயதைத் தாண்டிவிட்ட வினாயகமூர்த்தி பற்பல வருடங்கள் அச்சிறு இனிமைகளை ரசித்து வியந்துவந்தார். அவர் உள்ளம் மேலே செயலுக்குத் தூண்டவில்லை. பின்னர்தான் அது ஏங்க ஆரம்பித்தது. நாகரீக நகரத்தில் என்னென்னவோ நடக்குது. எவ்வளவோ திருவிளை யாடல்கள்! நானும் சிறிது துணிந்து செயல் புரிந்திருந்தால், தேவகியோடு எவ்வளவோ இன்பவிருந்து அனுபவித் திருக்கலாமே! என்று மிக வருத்தப்பட்டார் அவர்.

விநாயகமூர்த்தி லட்சியவேகம் எதையும் வளர்த்து, அதை எய்துவதற்காக ஒரே வெறியோடு செயலாற்றவில்லை. ஆன்மீகம், தேசீயம், சமூகப் பணி, இலக்கிய உபாசனை, கலைவிஞ்ஞான ஆராய்ச்சி என்ற எத்துறையும் லட்சிய தாகமாய் அவரை வாட்டி வதைக்கவில்லை. பொறுப்பற்று வாழும் கட்டுகளற்ற தனிவாழ்வு அவருக்குப் பிடித்திருந்தது. இஷ்டம் போல் காலம் போக்க முடிந்தது. போக்கினார். லட்சிய மற்ற வாழ்க்கைமுறை வறண்டதாய் அவரை தகிக்கவும், தனிமை அவரை வாட்டியது. உணர்ச்சித் தீ அவரைக் கருக்கியது. அதன் சுவாலை அவர் உள்ளத்தைத் தீய்த்துக் கொண்டிருந்தது. செயல் துணிவு இல்லாது. வெறும் எண்ணங்களைக் கொண்டே அந்தத் தகிப்பை அடக்க முயன்றார் அவர்.

10.