பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. வாழ்க்கைப் போராட்டம்

குளிர் காற்று வெறித்தனமாய் சுழன்று கொண்டி ருந்தது. அப்போது மழை இல்லை. எனினும் சற்று முன் வரை அழுது சிணுங்கியவாறிருந்த தூறல் மீண்டும் வரும் என்பதற்கு அறிகுறிகள் இருந்தன. அழுக்குப் போர்வை களைக் கொண்டு மூடப்பட்டது போல் தோன்றிய வானத்தில், சூலுற்ற மேகங்கள் கனத்துத் தொங்கின.

மூன்று நாட்களாகவே மழை இப்படித் தான் தொல்லை கொடுத்து வந்தது. ‘சனியன் ஒரே அடியாய் பெய்து தொலைத்தோம் என்றில்லையே. நசுநசுன்னு அழுகுணித் துற்றலாக இருக்கு. இதனால் சனங்களுக்கு சீக்குதான் வரும். ரோடு, வீடு எல்லாம் ஒரே ஈரக்காடாயிட்டதே’ என்று பலரும் முணுமுணுப்பது சகஜமாயிற்று.

நிரந்தரமான ஒரு சீக்காளி கிடையாய் கிடந்த அந்த வீட்டில் முணுமுணுப்பும் மனப்புழுக்கமும் அதிகரித் திருந்தன.

‘சவம் இருந்தபாடாவுமில்லை, செத்துத் தொலைஞ் சோமின்னும் இல்லே. இப்படி விழுந்து கிடக்கிறதுனாலே