பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 புண்ணியம் ஆம் பாவம்போம்:

அவருக்கும் தொல்லை; இருக்கிறவங்களுக்கும் சிரமம்தான். யாராலே தினம் பாடு பார்க்க முடியுது?’ என்று வீட்டு அம்மாள் மீனாட்சி அடிக்கடி அலுத்துக் கொண்டாள்.

அவளைக் குற்றம் சொல்வதற்குமில்லை. அவள் அதிகாலை ஐந்து மணிமுதல் இரவு பத்து, பத்தரை வரை இயந்திரம்போல் உழைக்க வேண்டியிருந்தது. வீடு, குடும்பம் என்றால் எத்தனையோ வேலைகள். சிறுசும் பெரிசுமாக ஏகப்பட்ட அலுவல்கள். புருஷனுக்கு எங்கோ ஒரு கடையில் ஏதோ ஒரு வேலை. ஆனா அவொ கலெக்டர் உத்தியோகம் பார்க்க மாதிரித்தான். தோரணைகளுக்கும் அதட்டல் களுக்கும் குறைச்சல் கிடையாது. பிள்ளைகளோ அதுக்கு மேலே பொருளாதார நிலைமை படுமோசம். அரக்கப் பறக்கப் பாடுபட்டும் அரைவயிற்றுச் சோற்றுக்கு வழி யில்லை, அவளுக்குப் பெரும்பாலான பொழுதுகளில் ‘பருக்கையும் தண்ணியும் தான் வயிற்றை நிரப்பும். பருக்கைகளைவிடத் தண்ணீரே அதிகம் இருக்கும் அநேக சமயங்களில், x

வறுமை வாழ்க்கை அந்தக் குடும்பத்தை வெகுவாகச் சோதித்தது. அவர்கள் மனசை, குணங்களைப் பெரிதும் பாதித்தது. இன்னும் அதிகமாகச் சோதிக்கவும் பாதிக்கவும் வந்து சேர்ந்தார் ஆண்டபெருமாள் பிள்ளை. மீனாட்சியின் மாமனார். -

‘சாகதுக்கு இடம் தேடி இங்கே வந்தாராக்கும்! ஏன், இத்தனை நாள் இருந்தது மாதிரி மகள் வீட்டிலேயே இருக்கப்படாது? இல்ல. பெரிய மகன் வீட்டுக்குப் போனா என்னவாம்? கெதியாயிருக்கையிலே எல்லாம் அங்கே இடம் இருந்தது. சீக்கு வந்ததும், சின்னமகன் நெணைப்பு வந்துட்டதாக்கும்?’ என்று மீனாட்சி புலம்பினாள்.