பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 53

பேச்சு போலச் சளசளக்கும் சிலமயம். விட்டு வழி வாங்குவது போல் வெறிக்கும். பிறகு சிறு தூறலாய் விரையும். கனக்கும். குறையும். அழும். சிணுங்கும். சீறும். காற்றுடன் குலவிக் கொட்ட மடிக்கும். சூரியனை முகம் காட்டவிடாது மேகப் பட்டம் விடும். குளிரைப் பரப்பும். இரவு பகலாய் அதன் லீலைதான் எங்கும்.

கிழத்துக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. சட்டை, கோட்டு எல்லாம் போட்டிருந்தார். எனினும் குளிர் உடலை நடுக்கியது. தரைமீது சாக்கு பரப்பி, அதன்மேலே கம்ப்ளி, சமுக்காளம் என்று விரிக்க வேண்டியதாயிற்று. போர்வையும் தேவைப்பட்டது.

அதனால் பிள்ளைகளுக்கும் மீனாட்சிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. புகைந்து கனன்று கொண்டிருந்த மீனாட்சி யின் உள்ளம் பற்றி எரியலாயிற்று.

‘சாகப்போகிற கிழத்துக்கு இத்தனை சுகம் என்னத்துக்கு? இதைப் பேணி பாதுகாக்க நானும் என் புள்ளைகளும் என்ன பாடெல்லாம பட வேண்டியிருக்கு? சாகிற சனியன் சீக்கிரம் செத்துத் தொலைச்சா என்ன?’ என்று அவள் குமைந்தாள். கொதித்தாள். வெடித்தாள்.

அப்பாவியான அவள் புருஷன் பெண்டாட்டியாத்தா பெரியாத்தா, பிழைக்க வழி நீ சொல்லத்தா என்று கும் பிட்டுப் பணிவிடை செய்யச் சித்தமாகி விட்டான். அவனுக்கு அவன் சுக செளகரியங்கள் குறையக் கூடாது. மீனாட்சியை பகைத்துக் கொண்டால் எதுவும் நடக்காது என்பது அவன் அனுபவபூர்வமாகப் பெற்றிருந்த ஞானமாகும்.

தந்தை ஆண்டபெருமாளிடம் அவனுக்கு ஒட்டுதலோ, பிரியமோ எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. அவரும் மகன் களிடம் காட்டிய பாசத்தைவிட அதிகமான அன்பை மகளிடம்தான் வைத்திருந்தார். அவருடைய மனைவி