பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 & புண்ணியம் ஆம் பாவம்போம்:

இறந்துவிட்ட பின்னர், கொஞ்ச நஞ்சமிருந்த சொத்தையும் பணத்தையும் ஊதாரித்தனமாக கரைத்துவிட்டு, ஒடியாடி

ஒடுங்கிக் கிடக்க நேரிட்டதும் மகள் வீடே செளகரியமான இடம் என்று தேர்ந்து கொண்டார். எப்படியோ கிடைத்து

வந்த சிறுபணத்தை அவ்வப்போது மகளுக்கே கொடுத்து

வந்தார். எப்பவாவது பெரிய மகன் வீட்டுக்குப் போவதும்,

சில நாட்களில் அங்கே பிடிக்கவில்லை என்று வெளியேறிச் சிதம்பரம் வீடு தேடி வருவதும், இங்கே போதுமான வசதிகள் இல்லை என்று மறுபடியும் மகள் வீடு சேர்வதும் அவரது

வாழ்க்கை நியதி ஆகியிருந்தது. இந்தத் தடவையும் அவர் அப்படித்தான் வந்திருந்தார். ஆனால் உடல் நிலை மிகவும்

மோசமாகியிருந்தது. கால ஓட்டத்தில் மிகுதியும் பொக்

காகிப் போன உடம்பு, வரவர சத்தான உணவுப் பொருள்கள் அவருக்குக் கிடைக்க வழி இல்லாது போய்விட்டது.

அவரிடம் சொத்தும் ரொக்கமும் இருந்திருக்குமானால்,

அவற்றின் மீது கருத்து வைத்து, மகன்களும் மகளும் அவரை உபசரிப்பதில் சிரத்தை காட்டியிருப்பார்கள். அவர் வெறும்

நபராகி விட்டபடியால், “கிழம் சாகமாட்டாம அலையுது: இதுக்கு ஆர்லிக்கம் டானிக்கும் வாங்கி அழ யாருகிட்டேப்

பணம் இருக்கு? என்று அலட்சியமாக மதித்தார்கள்

அவர்கள்.

அனைவரிலும் வெறுப்பை மிக அதிகமாகக் கொட்டி யவள் மீனாட்சிதான்.

ஆண்டபெருமாள் பிள்ளை அவள் வீடு தேடி வந்ததும் தொடர் மழையும கூட வந்துசேர்ந்தது அவளது ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. இந்த ஆக்கங்கெட்ட கிழடுதான் இப்படி மழையையும் கூட்டிக்கிட்டு வந்திருக்கு என்று குற்றம் சாட்டவும் அவள் தயங்கவில்லை. அவளது எரிச்சலையும் கசப்பையும் துண்டி விடும் விதத்தில் பெரியபிள்ளையைக் கடுமையான நோய் பற்றிக் கொண்டது. .