பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 புண்ணியம் ஆம் பாவம்போம்!

விடிவதற்குமுன்னரே தெளித்துக் கோலம் போடுவதற் காகக் கதவைத் திறந்த மீனாட்சி பதறினாள். விளக்கை எடுத்துவந்து பார்த்ததும், கிழவர் கட்டையாயக் கிடந்த நிலை தெளிவாயிற்று. அவள் செயலிழந்து நின்று விடவில்லை. அவசரம் அவசரமாகக் கணவனை எழுப்பினாள்.

இரண்டு பேரும் சேர்ந்து, சவமாகி விட்ட கிழடை உள்ளே கொண்டு போய் நல்ல இடத்தில் படுக்கவைத் தார்கள். உடையைச் சீர்செய்து, உடலைப் போர்வை கொண்டு மூடினார்கள். பக்கத்தில் குத்து விளக்கை ஏற்றி வைத்தாள் மீனாட்சி. - -

‘முதல்லே உங்க அண்ணன் கிட்டேப் போய் விஷயத் தைச் சொல்லுங்க. கையோடு பண்மும் எடுத்து வரும்படி சொல்ல மறந்திடாதீங்க. அடுத்தாப்லே தங்கச்சிக்காரி வீட்டுக்குப் போய் சொல்லுங்க. நம்ம கையிலே தம்பிடிக் காசு கிடையாதுன்னும் பேச்சோடு பேச்சா, அவ காதிலே போட்டு வையுங்க” என்று உபதேசித்தாள் அந்தக் குடும்ப விளக்கு.

சிதம்பரமும் தலையை ஆட்டிவிட்டு விடுவிடென்று வெளியே நடந்தான்.

அப்போது சிறு தூறல் கூட இல்லை. காற்றும் அமர்ந்து விட்டது. சூரியன் அன்று தன் முகத்தைக் காட்டக் கூடும் என்பதற்கு அறிகுறியாய் கீழ் வானம் சிவப்பேறித் தோன்றியது. -