பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாக்கியம் பிள்ளை திய தர வர்க்கத்தைச் சேர்ந்த சராசரி மனிதர்கள் எல்லோரையும் போன்ற ஒரு சாதாரண நபர் தான். ஆகவே அந்த வர்க்கத்தில் பெரும்பாலானவர்கள் பெற்றுள்ள, வளர்த்து வருகிற, ஆசைகள், கனவுகள், எண்ணங்கள், ஏக்கங்கள் வகையராவை உள்ளத்துள் மண்ட வைத்துக் குமைந்து கொண்டிருக்கும் பேர்வழியாகத் தான் அவரும் காலத்தை ஒட்ட நேர்ந்தது.

வாழ்க்கையின் உயர்வுக்கும் சுக செளகரியங்களுக்கும் உண்மையாக உழைத்து உருப்படியாகப் பணம் தேடிச் சரிக் கட்ட முடியாது என உணர்ந்து, திடீர் வரவு” ஆக எங்கிருந் தாவது எப்படியாவது லம்ப் ஆகப் பணம் வந்து சேரும், நாம் ஜோராக வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று ஆசைப் படுவதும் எதிர் பார்ப்பதும் மத்திய தர வர்க்கத்துச் சராசரி மனிதர்களின் குணாதிசயங்களில் ஒன்று ஆகும். இதற்கு மந்திரம்போல் நம்பிக்கை ஊட்டுகிற பல விஷயங்கள் உண்டு. கல்யாணம் மூலம் கிடைக்கக் கூடிய பெண்டாட்டி வீட்டுச் சொத்து, குடும் பத்தில் தூரத்து உறவில் கொள்ளி முடிந்து போகிறவள் சேர்த்து வைத்து இந்தாப்பா!’ என்று தரக்கூடிய