பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160* புண்ணியம் ஆம் பாவம்போம்!

சொத்து, லாட்டரிப் பரிசு, குதிரைப் பந்தய அதிர்ஷ்டம் என்று பலப்பல.

வாழ்க்கைப் பாதையில் முக்கி முரண்டியடித்துத் திண்டாடித் திணறிக் கொண்டிருந்த பாக்கியம் பிள்ளை, வாழ்வெனும் பந்தயத்தில் வெற்றிகள் பெற்று ஜாம் ஜாம் என்று அனுபவித்துச் சுகமாகக் காலம் தள்ள வேண்டும் என்ற ஆசையோடு, அவ்வப்போது நம்பிக்கை வைத்த லாட்டரி களும், ‘பந்தயக் குதிரைகளும் பலவாகும். விளைவுகள்? தெரிந்த விஷயம் தானே!

சுலபமாகப் பணம பண்ணுவதற்கு ஏற்பட்ட சுருக்கு வழிகளில் ஒன்று என ‘மாப்பிள்ளை வீட்டுக்காரர்களினாலும் கல்யாணப் பிள்ளையினாலும் கருதப்படுகிற கல்யாணம் என்கிற லாட்டரி பாக்கியம் பிள்ளைக்குத் தேடிக் கொடுத்த மனைவி எனும் அதிர்ஷ்டப் பரிசு’, அவருக்கு செலவுக்கு வழி வைக்கும் தொல்லையாகவும் சுமையாகவும் தான் அமைந்ததே தவிர, வலது காலை முன்னே வைத்து வரும் போதே அள்ளிக் கொண்டு வரும் சீதேவியாகவும், அப்புறம் அடிக்கடி அம்மாவீட்டிலிருந்து அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு வரும் ஆற்றல் படைத்த திருமகளாகவும் விளங்க வில்லை.

திட்டமான மாத வருவாய்க்கும், அதைவிட அதிகமான மேல் வரும்படிக்கும் வகை செய்யக் கூடிய உத்தியோகம் ஏதாவது அவசியம் தேவை என்று நம்புகிற மத்தியதர வர்க்கத்தின் சரியான பிரதிநிதியான பிள்ளை, அதற்குத் துணைபுரியக்கூடிய படிப்பிலும் பரீட்சையிலும் நம்பிக்கை வைத்தது என்னவோ உண்மை. ஆனால், பரீட்சைகளில் தேறுவதற்கே அவர் லாட்டரி அடிக்க வேண்டியிருந்ததே! அவர் எங்கே பெரும் படிப்புப் படித்து, பட்டங்கள் பெற்று, சம்பளமும் கிம்பளமும் கிடைக்கக் கூடிய நல்ல உத்தி