பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#62 & புண்ணியம் பாவம்போம்:

டானுகளா என்ன? எட்டாயிரத்துக்கு நகை போடுதேன், பத்தாயிரத்துக்கு நகை போடுதேன், மாப்பிள்ளை வரிசை ஐயாயிரம் தாறேன், ஆறாயிரம் தாறேன்னு போட்டி போடுவாங்களா சும்மாவா? ஹாங்? அப்புறம் வெள்ளியும் எவர்சில்வருமா சீர்வரிசை, டெரிலினும் டெரீகாட்டுமாக டிரசுகளின்னு கொண்டாந்து குவிக்கத் தயாராக யிருப்பாங்க.. டேய் செல்லையா, ஒரு கை பார்த்துடனும் தெம்பாக இரு’ என்று பாக்கியம் பிள்ளை தன் மனைவியிடமும் மகனிடமும் சொல்வது வழக்கம். -

இவ்வளவுக்கும் பையன் எஸ்.எஸ்.எல்.சி. தான் படித்துக் கொண்டிருந்தான். பரீட்சை எழுதி விட்டான். முடிவு தெரிய வேண்டும்.

முடிவை, அவனைவிட அதிகமான ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தார் பெரியவர். பையன்ை கல்லூரி யில் சேர்க்க வேண்டும் என்று அவர் ஆசைப் பட்டார். எல்லோரிடமும் பேசினார்.

அவனுக்கு ஒரு இடம் பிடித்துக் கொடுக்கும்படி பலரிடம் சொல்லியிருந்தார். எப்படியும் இடம் கிடைத்து விடும். காலேஜில் படிப்பது என்றால் பணம் செலவாகத்தான் செய்யும். அதைப் பார்த்தால் காரியம் நடக்குமா? - இந்தவிதமாக அவர் எண்ணக் கோட்டைகள் கட்டி வந்தார்.

‘பாலாகி விடுவோம்’ என்று தான் எண்ணினான் பையன், சில சமயம் பெயிலானாலும் ஆகி விடுமோ?’ என்ற சந்தேகமும் பயமும் அவனைக் குழப்பின. செல்லையா படிப்பிலே மக்கு அல்ல. ரொம்ப பிரைட்டும் இல்லை. அதனால்தான் இந்தச் சஞ்சலம். .

அவனுடைய இரண்டுங்கெட்டான் நிலையைத் தீர்த்து வைக்கக் கூடிய ரிசல்டும் வந்து சேர்ந்தது. பத்திரிகையில்