பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 64 புண்ணியம் ஆம் பாவம்போம்!

பூசைக்காப்பு கொடுத்தால் தான் அவருடைய ஆத்திரம் கொஞ்சம் தணியும். இதைத் தெரிந்து கொண்டு தானோ என்னவோ பையன் வீட்டுப் பக்கம் தலைகாட்டவில்லை.

“எங்கே போயிருப்பான்? சாப்பிடக்கூட வரலியே, சாப்பிடாமல் பட்டினி கிடந்து, பாவம்...’ என்று அம்மாக்காரி முணுமுணுத்துக் கொண்டிருந்தது தந்தையின் எரிச்சலை அதிகப்படுத்தியது.

‘கழுதை எங்கே சுத்தினாலும் தீவனத்துக்கு வந்து சேந்திரும் கவலைப்படாதே. தினம் நாலு வேளை தின்னு தின்னு உடலை வளர்த்ததுதான் மிச்சம் என்று கனன்று பொறிந்தார் அவர்.

நேரம் ஓடியது. பையன் வரவில்லை.

‘எந்தப் பொந்திலாவது பதுங்கிக் கிடப்பான். ராத்திரி நேரத்துக்கு வந்து சேருவான்’ என்று தந்தை கருதினார். தாயின்மனம் தான் படக் படக் என்று அடித்துக் கொண்டது. இனம் புரியாத ஒரு கலவரம் - ஒருவித பயம் - அவளைக் குழப்பியது. வாய்விட்டுப் புலம்பவும் துணிச்சல் இல்லை. அவர் சள்லொள் என்று எரிந்து விழுவாரே எனும் அச்சம். அவளைப் பொறுத்தவரை நேரம் கனத்துத் தொங்கியது.

அவள் பயந்தது சரியாகத்தான் போச்சு மணி மூன்று மூன்றரை இருக்கும். அந்தச் செய்தி கிடைத்தது. யார் கொண்டு வந்தால் என்ன? மகா மோசமான செய்தி. மிகுந்த துக்கரமானது. -

அந்த ஊருக்கு இரண்டு மைல் தள்ளித்தான் ரயில் நிலையம் இருக்கிறது. ஆயினும் இருப்புப் பாதை வளைந்து ஊரை நெருங்கிச் செல்கிற இடம் ஒன்று வடக்கே இருந்தது. அதுகூட ஒரு மைல் தூரத்துக்கு அப்பால்தான். வடக்கே ‘உச்சம் பரம்பு’ எனும் பெயர் பெற்ற வறண்ட பகுதி. செம்