பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

வல்லிக்கண்ணன் 165

மண்ணும் சரளைக் கற்களும் சிறுசிறு பாறைகளும் காய்ந்த புல்லும் நிறைந்த அந்தப் பிராந்தியத்தை அடுத்து ஒரு காடு. ஊர் மாடுகள் அங்கேதான் மேயப் போகும். காட்டுக்கும் பரம்புக்கும் எல்லைக்கோடு போல் நீண்டு கிடந்தது தண்டவாளம்.

அத் தண்டவாளத்தில் தலையை வைத்துப் படுத்து, ஒடிய வண்டித் தொடருக்கு தன் உயிரை அர்ப்பணித்து விட்டான் செல்லையா. எப்படித்தான் மனம் வந்ததோ? ஏன்தான் அவன் புத்தி இப்படி வேலை செய்ததோ? பரீட்சையில் தோற்று விட்டால் என்ன? வாழ்க்கை அஸ்தமித்துப் போச்சு என்றா கொள்ள வேண்டும்? ஆசைகள் பொய்த்துப் போனதால் அப்பா அடிப்பார். தினம் தினம் ஏசிக் கொண்டிருப்பார். மானத்தை வாங்குவார், நாலு பேர் மத்தியிலும் நாக்கிலே நரம்பில்லாமல் பேசுவார். என்றெல்லாம் அவன் குழம்பியிருக்க வேண்டும். என்ன செய்வது என்று புரியாத ஒரு குழப்பத்தில், அவன் இந்த முடிவைத் தேர்ந்திருக்கலாம். தன்னம்பிக்கை இல்லாத அப்பாவி, பாவம், தன் கதையை முடித்துக் கொண்டான்.

இந்தச் செய்தியையும் நம்புவதற்குக் கஷ்டப்பட்டார் பெரிய பிள்ளை. நம்பியே தீர வேண்டியிருந்தது. ஏன் இப்படிச் செய்தான்? பைத்தியக்காரப் பிள்ளை இப்படியா பண்ணும்? சே என்று முனகினார். இந்த அதிர்ச்சி அவரை வெகுவாகப் பாதித்தது. துக்கம், வேதனை ஏமாற்றம் எல்லாம் அவருள் குழம்பிப் புரண்டு அவரைப் பித்துப் பிடித்தவர் போல் ஆக்கின. அன்று மட்டுமல்ல; பல நாள் வரையிலும்.

வாழ்வின் கடைசிக் காலத்திலாவது சுகசெளகரியங் களைப் பெறுவதற்குத் துணைபுரியக் கூடும் என்று பாக்கியம் பிள்ளை நம்பிக்கை வைத்திருந்த பந்தயக்குதிரை அவர்