பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 புண்ணியம் ஆம் பாவம்போம்!

எதிர்பார்த்தபடி வெற்றி பெறாதது அவருக்கு ஏமாற்றம் அளித்தது. எனினும் அந்த ஏமாற்றம் அவருள் மூட்டிய

ஆத்திரத்தையும் வெம்மையையும் வெறுப்பையும் அவிந்து

அடங்கும்படி செய்துவிட்டது அந்தப் பந்தயக் குதிரையின்

அழிவு. இது அவர் உள்ளத்தை வெகுவாகப் பாதித்தது.

பிள்ளை தமது முந்திய கோபத்தையும் கொதிப்பையும்

மறந்துவிட்டே பேசினார்.

‘அநியாயமா இப் படிப் பண்ணிப் போட்டானே! பரீட்சையிலே பெயிலாகிறது சகஜம். அதுக்காக உயிரையே அழிச்சுக்கிடணுமா என்ன? இன்னுமொரு வருசம் நல்லாப் படிக்கிறது. அட, உனக்கு படிப்பிலே ஈடுபாடு இல்லை. உன் மூளையிலே படிப்பு ஏறலேயின்னே வச்சுக்கிடுவோம், விட்டுடு. ஏதாவது ஒரு வேலை கிடைக்காமலா போயிரும்? நம்ம புஸ்தகக் கடைப்பிள்ளைவாள் கிட்டேச் சொன்னா ஒரு வேலை போட்டுக் கொடாமலா இருப்பாக வீணா இப்படிச் செஞ்சிட்டியேடா பாவி!” என்ற அங்கலாய்த்தார் தந்தை. வந்தவர் போனவர் எதிர்ப்பட்டவரிடமெல்லாம் இவ்வாறு சொல்லிப் புலம்புவது அவர் வழக்கமாகி விட்டது.

இந்தக் கதை இங்கேயே முடிந்து விடவேண்டியதுதான். ஆனால் பாக்கியம் பிள்ளையின் மனப்போக்கின் ஒரு கோணப் பார்வையாக மட்டுமே இக்கதை பிறக்கவில்லை. மனித மனம் விசித்திரமானது; தானே தன்னுடைய மனசை அறிந்து கொண்டிருப்பதைவிட அவனுடைய மனசை மற்றவர்கள் அதிகம் அறிந்துவிட்டதாக நம்புகிறார்கள்; ஆகவே அவன் ‘மனசார ஒன்று சொன்னால்கூட, மற்றவர்கள் அதை அவ்வாறே ஏற்றுக் கொள்ளாது தத்தமது மனம் போன போக்கெல்லாம் விளக்கமும் விரிவுரையும் பொருள் பேதமும் பாடபேதமும் தருவதில் உற்சாசகம் காண்கிறார்கள். இதைக் கூறுவதற்காக இக்கதை வேறு சிலரது மனசை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது?