பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 : புண்ணியம் ஆம் பாவம்போம்!

வழக்கமான அலுவல்களில் ஈடுபட்ட அவன் மனம், இன்று ஏதோ புதுமையாக நடக்கப் போகிறது. இதுவரை கண்டறியாத என்னவோ ஒரு நிகழ்வு என்று குரல் கொடுத்துக் கொண்டேயிருந்தது. எதிர்பார்ப்பு உணர்வைத் தூண்டியது அது.

இயல்பான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் காலத்தின் மடிக்குள் அன்று அவனுக்காகப் பதுக்கி வைக்கப் பட்டிருக்கிற அதிசயம் என்னவாக இருக்க முடியும்? அது எப்போது, எப்படி, எவ் உருவில் அவன் முன்னே உதறப்படும்?

நேற்று போல் இன்று - இன்று போல் நாளை என்று இயந்திர கதியில் ஒடிக் கொண்டிருக்கிற சாதாரண வாழ்விலும் கூட. எப்போதாவது எதிர்பாராதது நடந்து விடுகிறது, அதனால், ஒவ்வொரு நாளும் ஏதேனும் புதுமையை எதிர்பார்த்துக் காத்திருக்கத் தூண்டுகிறது

f))

அன்றும் அவன் மனம் அப்படி ஒரு எதிர்பார்த்தலை வளர்த்தது. யாராவது அவனைத் தேடி வரலாம், இருண்ட அறைக்குள் புகும் ஒளிக்கதிர் போல; புழுக்கமான இடத்தினுள் பிரவேசிக்கும் இனிய காற்று போல. அந்த வருகை சிறு நேர இன்பமும் புத்துணர்வும் சேர்க்கலாம். அப்படி யார் எங்கிருந்து வரக் கூடும் இன்று? அவனது கற்பனை எங்கெங்கோ இருக்கும் யார் யாரையோ தொட்டு இழுத்தது. எவரும் வரலாம் என்று எண்ணிக் கொண்டான் அவன்.

அல்லது, தபாலில் புதுமையாக ஏதாவது வரலாம் தானே? -