பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 73

அவ்விதம் அவனைத் தேடி வந்த திடீர் தபால்களை நினைக் கையில் அவன் மனம் சிரித்துக் கொண்டது. அதிர்ஷ்டத்தை சோதிடம் கூறும் கடிதம் ஒன்று வந்தது ஒருநாள். அதிர்ஷ்டச் சீட்டுகள் மூன்று இணை சேரும் தபால் வரும் ஒரு நாள்; எதிர்பாருங்கள்; விசேஷப் பரிசு கிட்டும் என்று உறுதி கூறியது அந்தக் கடிதம்.

பல நாட்களுக்குப் பின் அதிர்ஷ்டச் சீட்டுகள் இணைசேரும் கடிதமும் வந்தது. நூறு ரூபாய் விலை உள்ள அரிய நூல்; உமக்கு எழுபது ரூபாய்க்குக் கிடைக்கும்; இணை சேர்ந்த சீட்டு லேபிள்களை உரிய அட்டையில் ஒட்டி கையெழுத்திட்டு அனுப்புக: பணம் அனுப்ப வேண்டாம். புத்தகம் வி.பி. போஸ்டில் வந்து சேரும் என்று ஆசை காட்டியது அந்த தபால்.

நாகரிக யுகத்தில் வியாபார காலத்தில் விளம்பர சாமர்த்தியம் எப்படி எப்படி எல்லாம் வேலை செய்கிறது பாரேன் என்று எண்ணிக் கொண்டது அவன் மனம்.

இன்னொரு சமயம் பூச்சாண்டி காட்டியது தபாலில் வந்த ஒரு கடிதம். ரீவெங்கடாசலபதி துணை. இதை ஒரு கார்டில் இருபது தடவை எழுதி விலாசதாரர்களுக்கு அனுப்பு: (தனித் தனிக் கார்டுகள். இருபது பேருக்கு) இச்சங்கிலி அறுபடாமல் உடனே எழுதி அனுப்பு. உனக்கு நன்மை உண்டாகும். அலட்சியம் செய்து அனுப்பாமல் நிறுத்தி விட்டால் அல்லது குறைவாக எழுதி அனுப்பினால் இருபது நாடகளுக்குள் உனக்கு எதிர்பாராத ஆபத்து வந்து சேரும். இவ்விதம் எழுதி அனுப்பாமல் பரிகாசம் செய்த ஒருவன் விபத்தில் சிக்கி மிகவும் சிரமப்பட்டான். இருபது கார்டுகள் எழுதி அதைப் பெறுகிற இருபது பேரும் தனித் தனியே இருபது இருபது நபர்களுக்கு எழுதி அனுப்பி