பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 . - புண்ணியம் ஆம் பாவம்போம்!

‘அப்பம் ஒரு கதை சொல்லேன்’

அவர் ஆரம்பித்தார் செட்டியார் கடையில் வடை திருடி காக்கா கதைதான்.

“இந்தக் கதை வேண்டாம். இது தான் எனக்குத் தெரியுமே. அம்மா சொல்லியிருக்கா. அப்பா சொல்லி யாச்சு. நீயும் எத்தனையோ தடவை சொல்லியிருக்கே...”

“சரி. வேறே கதை சொல்லுதேன்” என்று தலையைச் சொறிந்தார் தாத்தா. ‘நீ படுத்துக்கோ, நானும் பக்கத்திலே படுத்துக்கிடுதேன். விளக்கை அணைக்கவேண்டாம். கொஞ்சமா எரியும்படி சுருக்கி வைக்கலாம், என்ன?” என்று குழைந்தார். -

வள்ளி மறுக்கவில்லை. அவரும் அப்படியே செய்தார். படுத்தார். கதை சொல்லலானார். சித்திரக்குள்ளன் கதை: “ஒரு அப்பாஅம்மாவுக்கு ஏழு பிள்ளைகள். கடைசிப்பிள்ளை ரொம்பவும் குள்ளம். அதனாலே, சித்திரக் குள்ளன்னு பேரு, வீட்டிலே ரொம்பவும் கஷ்டம். சோத்துக்கு வழியில்லே. அரைவயிறு, கால் வயிறு சாப்பாடு கூடக் கிடைக்கல்லே. அப்பாவும் அம்மாவும் யோசிச்சாங்க. பிள்ளைகளைக் கூட்டிக் கிட்டுப் போயி, பக்கத்துக் காட்டிலே விட்டுப் போட்டு வந்திரனும்னு முடிவுபண்ணினாங்க. அவங்க ராத்திரி வேளையிலே இப்படி ரகசியம் பேசியதை, குள்ளன் மட்டும் கவனிச்சுக் கேட்டக்கிட்டிருந்தான். மத்தப் பிள்ளைகள்ளாம் துங்கிட்டுது. குள்ளப்பயலுக்கு துக்கமே வரலே. விடியறதுக்கு முன்னாடி எழுந்திருச்சான். வெள்ளைக் கல்லுகளாப் பார்த்துப் பொறுக்கி, மடி நிறையக் கட்டிக் கிட்டான்...” > -

‘'எதுக்கு?” “கதையிலே அது வரும். நீ பேசாம கேளு... எல்லாரும்