பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#7

8


புண்ணியம் ஆம் பாவம்போம்!

முன்னைப் பழம் தொடர்பு எதுவும் தானோ? எதைத் தேடி இங்கே நீ வந்தாய்? புதியவனே!

அவன் மனம் கேள்விகளை அடுக்கி மகிழ்ந்தது.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த புதிய பறவை உவகைக் குரல் ஒன்றைச் கிரீச்சிட வைத்தது. சுற்றிலும் நோக்கியது. துள்ளிப் பறந்து சுழன்று ஜிவ் வென ஒளி வெளியிலே பாய்ந்து உயர்ந்தது.

அவன் பார்வைப் புலனிலிருந்து மறைந்து போனது.

அவனுள் பூத்துக் குலுங்கிய பலப் பல வண்ணப் பூக்களிலிருந்தும் புதியதோர் மணம் எழுந்து அவனுள் நிரம்பியது போலிருந்தது அவனுக்கு எங்கும் மோகனமாய் பரவி சூழ்நிலையை அற்புத எழிலாய் மாற்றி விடும் அமுத நிலவொளி போல் ஒரு ஆனந்த நிறைவு அவன் மனசில் நிலைப் பெற்றது. இப்போது.