பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. வெளிச்சம்

iெfழ்க்கை இருண்டு விட்டதாகத் தோன்றியது சிவசிதம்பரத்துக்கு. --

எங்கும் இருட்டு. எதிலும் இருட்டு. எப்போதும் இருட்டு. வீட்டிலும் வெளியிலும் ஒளி இல்லை என்றே அவருக்குத் தோன்றியது. அவர் உள்ளத்தில் இருட்டு நிலவி யதுதான் காரணம்.

சிவசிதம்பரம் இந்தவாழ்க்கை அர்த்தமற்றது என்ற நினைத்தார். மனிதர்கள் எல்லோரும், இயந்திர ரீதியில் செய்ததையே செய்து கொண்டு, எண்ணியதையே எண் னியும் பேசியதையே பேசியும், பொருளற்ற தன்மையில் பொழுதுகளை ஒட்டிக் கொண்டிப்பதாக அவருக்குப்பட்டது.

நேற்றுப் போல் இன்று; இன்று போல் நாளை; என்றும் ஒரே மாதிரித்தான். திடீரென்று ஒருநாள் மரணம் வந்து அழித்து விடுகிறது. அனைத்தையும் அர்த்தமற்றதாக்கி விடுகிறது.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில், ஒவ்வொருவரும் சுயநலத்தோடும், சுயப் பெருமையோடும், சுயவிளம்பரத்