பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 புண்ணியம் ஆம் பாவம்போம்!

தோடும் என்னென்ன நாடகமெல்லாம் ஆடித் தீர்க்கிறார்கள்! முடிவில் சாவு வந்து கொத்திப் போகிறது. இதெல்லாம் எதுக்காக?

வாழ்க்கையே ஒரு போராட்டம் என்றால், அந்தப் போரா ட்டம்தான் எதுக்காக? காலத்தோடு போட்டி போட்டுக் கொண்டு, பயனுள் ளனவும் பயன் இல்லாதனவுமான காரியங்கள் பல பலவற்றையும் செய்து கொண்டு, பல விதமான உணர்ச்சிகளினாலும் எற்றுண்டு அலைக்கழிக்கப் பட்டு, குழம்பித் தவித்து, தன்னைச் சேர்ந்தவர்களையும் பிறரையும் குழப்பித் திணற வைத்தும் கோபித்தும் சண்டை போட்டும், வாழ்க்கையை அமைதியும் ஆனந்தமும் இல்லாததாக மாற்றிக் கொண்டு இறுதியில் செத்துப் போக வேண்டியிருக்கிறது; எனவே, வாழ்க்கைப் போராட்டத்தில் மனிதனுக்குத்தான் தோல்வி... -

இப்படி சிவசிதம்பரம் அடிக்கடி எண்ணிக் கொண்டி ருந்ததனால், அவர் உள்ளத்தில் இருட்டு கனிந்து கனத்தது.

அவர் மனிதர் யாரையும் நம்பத் தயாராகயில்லை. எவருடனும் பழக முன் வரவில்லை. தனிமை அவருக்குப்

பிடித்திருந்தது. அந்தத் தனிமை அவரது விரக்தி உணர்வு கொண்டு வீசிப் படர்ந்து செழிக்கத் துணைபுரிந்தது.

சிவசிதம்பரத்துக்கு நண்பர்கள் இல்லை. அவர் யாரு டனும் சுமுகமாகப் பேசிப் பழகுவதில்லை. அவருடைய இயல்புகளை உணர்ந்த அக்கம் பக்கத்தினரும் உற்றார் உறவினரும் அவரை விட்டு விலகியே போனார்கள்.

அவர் ஒரு உத்தியோகம் பார்த்தார். அதிலேயே ஆழ்ந் திருந்தார். கண்டிப்பாகவும் கறாராகவும் நடந்து வந்தார். எப்போதும் எதையாவது படித்துக் கொண்டிருந்தார். படிக்காத நேரங்களில், ஏதோ தீவிர யோசனையில் ஆழ்ந்திருப்பது போல் உம்மென்று உட்கார்ந்திருப்பார்.