பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் . 83

னாலும், சாவை வரவேற்று எதிர்நோக்க நாம் தயாராக இல்லை. பயம் தான் முந்துகிறது. உயிராசை வலியது. சாவை வரவேற்று இயல்பாகத் தழுவிக் கொள்வதற்குத் தனி தைரியம் வேண்டும்.

இந்த விதமாக எண்ணத் தொடங்கியது சிவசிதம்பரமனம்.

அது முதல் அவருள் மாற்றங்கள் அரும்பலாயின.

ஐயா, பிச்சை என்று கை நீட்டி அருகே வந்து கெஞ்சி யவர்களுக்கு எதுவுமே கொடுக்க மாட்டார் அவர். பிச்சை போட்டு, இவர்களுடைய சோம்பேறித்தனத்தை ஆதரிப்பது தப்பு என்றே அவர் மனம் பேசும்.

இப்போது அவர் பிச்சை கேட்டவர்களுக்கெல்லாம் காசுகள் தந்தார்.

‘ஸார், நான் இந்த ரோடை கடக்க வேண்டும், பயமாயிருக்கு. என்னை இட்டுக் கொண்டு அந்தப் பக்கம் விட்டு விடுங்களேன் என்று யாராவது தள்ளாதவர்கள், கிழவிகள் அவரிடம் உதவி கோரியது உண்டு. அப்போதெல்லாம் வேறே வேலை இல்லையாக்கும் என முனகியபடி நடப்பதே அவர் சுபாவம். அல்லது அந்தப் பேச்சு வேறு யாரை நோக்கியோ கூறப்பட்டதாக, தனது காதில் அது விழாதது போல், தன் பாட்டுக்கு முன்னேறுவார்.

இப்போது, ஏஏய் பார்த்துப் போ... வண்டி வருது... தில்லு நில்லு என்று எச்சரித்து, அவராகவே வலியப் போய் மற்றவர்களுக்கு உதவி செய்யலானார். முதியவர்களையும், சிறு பிள்ளைகளையும் கையைப் பிடித்து மெதுவாக நடத்தி, அவர்கள் ரோடை பத்திரமாய் கடப்பதற்கு உதவினார்.

அவர்கள் முகம் மலர்ந்து நன்றி கூறிய போது - அல்லது நன்றி உணர்வை சொல்லால் புலப்படுத்தத் தெரியாதவர்களாய் முகமலர்ச்சியாய் காட்டியபோது, அவருக்கு சந்தோஷம் ஏற்பட்டது. .