பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 18

5

சந்தோஷம் பூத்துக் குலுங்கும் முகத்தை அவர் பக்கம் காட்டியபடி - திரும்பித் திரும்பி நோக்கிச் சிரித்தவாறே அது பள்ளிக்குச் சென்றது.

அந்தக் காட்சி சிவசிதம்பரத்தின் உள்ளத்தில் தனி ஒளி பாய்ச்சியது. அவர் முகத்திலும் சிரிப்பு ரேகையிட்டது.

அன்று மாலை, அந்தப் பிள்ளையை அழைத்துக் கொண்டு அதன் தாய் வந்தாள். மரியாதை காட்டி வணங்கினாள். தன் கஷ்டங்களை புலம்பினாள். பணம் வந்ததும், நோட்டுக்கு அவர் கொடுத்த காசை திருப்பித் தந்து விடுவதாகச் சொன்னாள்.

அதெல்லாம் வேண்டாம். அது நல்லாப்படிக்கட்டும். ஒழுங்கா ஸ்கூலுக்குப் போகட்டும். அதை அடிக்காதே’ என்றார் அவர்.

‘சரி ஐயா என்று கும்பிட்டாள் தாய்.

அதுக்கு எப்பவாவது நோட்டு பென்சில் ஏதாவது தேவைப்பட்டால் என்னிடம் கேட்கச் சொல்லு. நான் வாங்கித் தருவேன்’ என்றும் கூறினார்.

அவள் தலையாட்டி, கும்பிடு போட்டு, மகளைக் கூட்டிச் சென்றாள். -

சிவசிதம்பரம் இப்படிப் பலருக்கும் சிறுசிறு உதவிகள் செய்வதில் உற்சாகம் கொண்டார். அதனால் அவர் உள்ளத்தில் மகிழ்ச்சி பூத்தது.

அவரிடம் உதவி பெற்றவர்கள், அவருடைய அன்புக்கு இலக்கான அக்கம் பக்கத்தினர், அவரை நேசிக்கலானார்கள். தங்கள் வீட்டில் விசேஷமாக வடை பாயசம் என்று ஏதேனும் செய்தால் அவருக்கும் அன்போடு கொடுத்து அனுப்பினார்கள்.

அன்பு அன்பை வளர்க்கிறது. அன்பு மனித நேயத்தை வளம் பெறச் செய்கிறது. அன்பு உள்ளத்தில் மகிழ்ச்சி பூத்துக்