பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. முதுகெலும்பு இல்லாதவன்


கீமோட்சியா பிள்ளை கடையில் வேலை பார்த்து வந்த ராமலிங்கம் அந்த வேலையை விட்டுவிட்டான்.

இது பலருக்கு ஆச்சர்யம் அளித்தது. அநேகருக்கு சர்வ சாதாரண நிகழ்ச்சியாகத் தோன்றியது. சிலர் பின்னே என்ன, அவருகிட்டே மனுசன் வேலை பார்க்க முடியுமா? இவன் இவ்வளவு காலம் அந்தக் கடையிலே ஒட்டிக்கிட்டு இருந்ததே பெரிசு’ என்று அபிப்பிராயப்பட்டார்கள். ,

‘என்னடே, கடை வேலையை விட்டுட்டியாமே?’ என்று கேட்டவர்களிடம் ராமலிங்கம் சுரத்தில்லாமல் பேசினான். ஆமா மானம் வெக்கம் எல்லாத்தையும் உதிர்த்துப் போட்டுத் தான் அங்கே வேலை பார்க்கணும். வாயிலே வந்தபடி எல்லாம் பேசுதாரு. எத்தனை நாளைக்குத் தான் பொறுத்துக்கிட்டு இருப்பது?’ என்ற முணுமுணுத்தான்.

அது சரிதாங்கேன், அவரு எப்பவுமே அப்படித்தான். முழு முழுப் பாட்டாத்தான் அறுப்பாரு’ என்று சிலர் ஆறுதல் கூறினார்கள். அவன் போன பிறகு சிலர், இன்னிக்குத்தான் புதுசாப் பேசிப் போட்டாருக்கும்? அவரு சுபாவமே அது