பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்

எழுந்திருச்சதும், பிள்ளைகளையெல்லாம் அப்பா கூப்பிட்டாரு. உங்களுக்கு வேடிக்கை காட்டப் போறேன்னு: சொல்லி, காட்டுக்குக் கூட்டிட்டுப் போனாரு பிள்ளைகள் எல்லாரும் அங்கேயும் இங்கேயும் அலைஞ்சு விளையாடினாங்க. அவங்களுக்குத் தெரியாம, அவரு மறைஞ்சு மறைஞ்சு விட்டுக்கு வந்துட்டாரு...”

‘அம்மா.” என்று தீனக்குரல் கொடுத்தாள் வள்ளி.

‘அம்மா வீட்டிலே இருந்தாள்.’

‘இல்லே. அம்மா, எங்கம்மா எப்பம் வருவா?’ அழுகையின் சாயல் தென்பட்டது. இதில்.

‘ஏன்ட்டி, இப்ப என்ன வந்துது?”

‘அந்தப் புள்ளைக, பாவம், காட்டிலே என்ன செய்யும்? அப்பா அம்மா இல்லாமே?” -

அவசரம் அவசரமாகத் தொடர்ந்தார் தாத்தா: “அதுக் குத்தான் குள்ளப்பயல் ஒரு தந்திரம் பண்ணிப் போட்டானே? அவன் மடி நிறைய வெள்ளைக் கல்லு சேர்த்து வச்சி ருந்தானில் லே அதையெல்லாம் என்ன செய்தான்னு நெனச்சே? அப்பா எல்லாரையும் கூட்டிக்கிட்டு, காட்டை நோக்கிப் போகையிலே, அவன் பின்னாலே நடந்தான். வழி நெடுக, வீட்டிலேயிருந்து காடு வரை, அந்தக் கல்லுகளை ஒண்ணு ஒண்ணா தரையிலே வீசிக்கிட்டு வந்தான்; அடையாளமா இருக்குமின்னு, சாயங்காலம், அண்ணன் மாரெல்லாம் அப்பாவைக் காணோமேன்னு அழுதாங்க. ‘வீட்டுக்கு வழி தெரியாதே, எப்படிப் போறது?’’ன்னு அழுதாங்க. குள்ளன் மட்டும் அழாமே, “நான் கூட்டிக்கிட்டுப் போறேன். வாங்கன்னு தைரியமாப் பேசினான் காலையிலே, வழி நெடுக வீசிவெச்ச வெள்ளைக் கல்லுகளை அடையாளம் பார்த்துக்கிட்டு அவன் முன்னாலே நடந்தான். எல்லாரும் அவன் பின்னாலேயே போனாங்க. வீடு வந்து சேர்ந்து