பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 புண்ணியம் ஆம் பாவம்போம்!

தானே? ஆயிரம் திட்டு ஒரு ஆனைப்பலன் என்று கவனிக்கம் கவனிக்காமலும் போக வேண்டியதுதான். இந்தக் காலத்திலே வேலை கிடைப்பது லேசாகவா இருக்கு? இந்தப் புத்தி கெட்ட பய உள்ள வேலையை உதறிப் போட்டு நிக்கானே. இன்னமே என்ன செய்யப் போறானாம்? என்று பேச்சு உதிர்த்தார்கள்.

‘என்ன தம்பி, இனிமேல் என்ன செய்யதா உத்தேசம், என்று அவனிடமே சிலர் கேட்கவும் கேட்டார்கள்.

‘ஏதாவது செய்யணும். பார்க்கலாம் என்று தான் அவனால் வார்த்தைகளை மென்று விழுங்க முடிந்ததே தவிர, இதைச் செய்யப் போகிறேன், அதை அப்படிப் புரட்டப் போகிறேன். எதெதையோ எப்படி எப்படியோ உருட்டித் தள்ள போகிறேன் என்ற ரீதியில் அடித்து விளாச முடியவில்லை. அவ்வாறெல்லாம் பேசுவதற்கு அவனிடம் வாய் இருந்த போதிலும், அப்படி துணிந்து அளப்பதற்கு ஊக்கம் அளிக்கக் கூடிய வக்கு அவனிடம் இல்லை.

அவ்விதம் பசை இருந்திருக்குமானால், இந்தக் காமாட்சியா பிள்ளை கடையை நம்பித்தானா ராமலிங்கம் பிறந்திருக்கான்? என்னாலே தனியா வியாபாரம் பண்ண முடியாதா? சின்ன அளவிலே ஒரு கடை, இல்லைன்னா வெறும் வெத்திலை பாக்குக் கடை வைத்து நடத்த முடியாதா? வேண்டாமய்யா, அப்பப்போ கொஞ்சம் சாமான்களை வாங்குறது; சைக்கிள் பின்னால வச்சுக்கட்டிக்கிட்டு ஊர் ஊராப் போய் தெருத் தெருவா விக்கிறது. இதிலே கணிசமா லாபம் கிடைக்கும். கிடைச்ச வரை பேர்துமே. செட்டி கப்பலுக்கு செந்தூரான் துனைம்பாக. கப்பலை இழுத்துத் தண்ணிலே விட்டால் அது பாட்டுக்கு மிதந்துக் கிட்டே போகும் என்ற தன்மையில் லெக்சரடிக்க ராமலிங்கமும் கூச மாட்டான்தான். அவன் கையில் காசு கிடையாது. அவனுக்குக் கடன் கொடுத்து உதவவோ, நிதி தந்து ஆதரிக்கவோ, ஒரு நாதியும் கிடையாது. அதுதான் அங்கே பெரிய கஷ்டம்.