பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 9


சொல்லவில்லை. மனைவியிடம் மனசு எழவில்லை.

o

சால்லக்கூட அவனுக்கு

ராமலிங்கத்துக்கு மளிகைக் கடையில் கையாளாக இருந்துஅனுபவம் உண்டே தவிர, வேறு எவ்விதமான வேலை செய்தும் பழக்கம் இல்லை. வேறு வேலைகள் பார்ப்பதற்கு வேண்டிய தகுதியும் ஆற்றலும் அவனிடம் இல்லவுமில்லை. ‘பட்டணமும் அல்லாத, பட்டிக்காடும் இல்லாத அந்த ‘ரெண்டுங் கெட்டான் ஊரிலே வேலை வாய்ப்புகளும் அதிகம் கிடையாது.

பஜார் என்று ஒன்று இருந்தது. அதில் பலரகமான கடைகளும் இருந்தன. அவனுக்கு வேலை என்று எதுவும் கிடைக்க வேண்டுமானால் அவற்றில் எதிலாவது கிடைத் தால்தான் உண்டு.

ராமலிங்கம் ஒவ்வொரு கடையாக முயன்று பார்த்தான். ஒவ்வொரு முதலாளியும் ‘நீ ஏன் காமாட்சியா பிள்ளை கடையை விட்டுவிட்டே? அவர் கடையிலே வியாபாரம் எப்படி? லாபம் எவ்வளவு வரும்? என்பன போன்ற விவரங் களை அறிந்து கொள்வதில் அதிக அக்கறை காட்டினார்கள். புதிதாக எதுவும் தெரிந்து கொள்ளவதற்கில்லை என்று உறுதிப்பட்டவுடன், இப்ப ஒண்ணும் வேலை இல்லையே டேய், நீ அவசரப்பட்டு அந்த வேலையை விட்டிருக்கப்படாது

என்று நல்லுரை புகன்று அனுப்பி வைத்தார்கள்.

ராமலிங்கம் பெருமூச்செறிந்து பச்சுத் தண்ணி"யைக் குடித்து வயிற்றை ரொப்பிக் கொண்டு பக்கத்து ஊர்களிலும் அலைந்து பார்த்தான்.

வீட்டில் பசியும் வறுமையும். செல்லம்மா அக்கம் பக்கங்களில் முன்பே கடன் வாங்கியிருந்தாள். இப்போது புதிதாகக் கடன் பெயர வழி இல்லை. வீட்டில் கிடந்த கொஞ்சம்