பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் *93

பணம் இருந்தால்தான் அமைதி, வீட்டுச் சுகம் எல்லாம் கிடைக்கும். வெளியிலே மதிப்பு பெறுவதற்கு மாத்திரமல்ல; வீட்டுக்குள் அமைதியும் மதிப்பும் பெறுவதற்குக் கூட பணம் தேவை. மானம், மரியாதை இன்னும் என்னென்னவோ எல்லாம் பசி வந்திடப் பறந்துபோம் என்று யாரோ சொன்னார்களே. அது முழுவதும் சரி ஆகாது. பணம் இல்லையென்றால் எல்லாம் பறந்து போய்விடும். பணம் இல்லாதவன் எல்லாம் மானமாக வாழமுடியாது. அப்படி வாழ விடமாட்டாங்க மற்றவங்க. இன்னைய வாழ்க்கை முறை அப்படியிருக்கு...

வீட்டுக்குள் நுழையாமலே தெருவில் இறங்கி கால்போன போக்கிலே நடந்த ராமலிங்கத்தின் மனம் புழுங்கிக் கொண்டிருந்தது.

முடிவாக அவன் நின்றபோது முன்னே காமாட்சியா பிள்ளை கடை தான் இருந்தது. -

‘என்னடே நீ பாட்டுக்கு சொல்லாமப் புரையாமல் போயிட்டா என்ன ஆகிறது? காரியமெல்லாம் எப்படி நடக்கு மின்னு நெனச்சே? இப்ப ஏன் தீவட்டித் தடியனாட்டம் வெளியே நிக்க உள்ளே போ. போயி ஒழுங்கா வேலையைப் பாரு. சவத்துப் பயலுக்குப் பொறந்த பய, அவன் அப்பன் வீட்டுக் கடை மாதிரித்தான். நினைச்சா வாறது, திடீர்னு வராம ஒழிஞ்சி போயிறது...’ என்று முதலாளி வழக்கமான பாணியில் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அவனுடைய உழைப்பாற்றல் அவருக்குத் தெரியும். அவன் இல்லாமல் நான்கு நாட்கள் அவர் பட்ட கஷ்டமும் அவருக்குத்தான் தெரியும்.

ராமலிங்கம் மெளனமாகத் தனது வேலைகளில் ஈடுபட்டான். சவத்துப் பயதான். உணர்ச்சிகள் செத்துப் போன சவம்தான் இனிநான் என்று முணுமுணுத்தண அவன் மனம்.