பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 20

திறம் சிலரை அவருடைய பக்தராக்கியது. வியப்பர்களும் அன்பர்களும் அவரைச் சுற்றிக் குழுமினர்.

காலப் பாழில் கவனிப்பாரற்ற இருள் நிலம் போல் கிடந்த அந்த இடத்தில் சிந்தனை ஒளியும் செயல் சலசலப்பும் சிறிது சிறிதாகப் பரவின.

அன்பர்களின் ஒரு அன்பர் அவரது பெரும் பக்தர் ஆனார். அவருடைய உள்ளம் உண்மையை வணங்கியது. உண்மையை எடுத்துச் சொன்ன நல்லவரை வாழ்த்தியது.

அவர் தலைவர். அவர் வழிகாட்டி. அவர் கடவுள்’ என்று துதிபாடத் தொடங்கினார் பக்தர்.

அவரைப் பிரதம சீடராக அங்கீகரித்தார் வழிகாட்டி. பக்தர்கள் பலரும் அவர் தலைவர், அவர் கடவுள் என்று பிரசாரம் செய்தார்கள். -

காலப் பாழில் கவனிப்பற்ற இருள் நிலம் போல் கிடந்த அந்த இடத்தில் புதுமைகள் பூத்தன. உணர்ச்சி நெளிந்து கொடுத்தது. உயிர் மூச்சு விட்டது.

விழிப்புற்றவர்கள் வழிகாட்டியின்அறிவொளியால் வசீகரிக்கப்பட்டதுபோல், விழிப்புறாதோர் பக்தர்களின் அழகுப் பேச்சால், அடுக்குப் பாடல்களால், எடுப்பான முழக்கத்தால் கவரப்பட்டார்கள்.

அவர் தலைவர். அவர் கடவுள்’ என்ற ஒலி எங்கும் பரவியது. பக்தர்கள் அன்பளிப்பு என்றும், காணிக்கை என்றும் அள்ளிக் கொடுத்தார்கள்.

- வழிகாட்டி கசப்பான உண்மைகளை சூடாக அள்ளி

வீசிக் கொண்டுதான் இருந்தார்.