பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2Q4 புண்ணியம் ஆம் பாவம்போம்:

மடத்தின் உயிர் நீரே எங்களின் ஒளி: இவ்விடத்துக்குச்சரியான வழிகாட்டியாவிர் என்று அவருடைய பக்தர்கள் போதைத் தூபம் போட்டு வந்தார்கள்.

ஒரு நாள் -

காலப் பாழின் கவனிப்பு மிகுந்த அந்த மடத்திலே பிளவு ஏற்பட்டது. தகர்ந்து பிளந்த ஒரு பகுதி சுவர் மீது ஏறி நின்றார் இளம் அடியார். சரியும் சுவருக்கு முட்டுக் கொடுத்து நின்றனர் அவரது வியப்பர்கள். - .

மோகனப் புன்னகையோடு, நிதி முடிச்சுகளோடு, அளவிலா நம்பிக்கையோடு அவர் முழக்கமிட்டலானார்:

‘நான் தலைவன். நான் கடவுள். நான் வழிகாட்டி. பணம், பதவி, பட்டம் எல்லாம் என்னுள் அடக்கம்!”

அருள் புரியும் ஐயனே உதவுக என்று அவரைச் சுற்றியும் கூட்டம் கூடியது. பலரது இயல்பு அது. -