பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 2G7

அவர் ஆத்ம ஞானி. ஆத்மாவுக்கு உயர்வும் கிடையாது, தாழ்வும் கிடையாது, மழை அதை நனைக்காது, வெயில் அதைச் சுட்டெரிக்க முடியாது. எங்கள் மகாப் பெரியவருக்கும் எல்லா நிலைகளும் சமம்தான். போற்றுதல்களும் புகழ்ச்சி களும் அவரை குவிப்படுத்திவிடா. தூற்றுதல்களும் வசை களும் அவரை பாதிக்க மாட்டா என்று அவருடைய பக்தர்கள் பிரசாரம் செய்தார்கள்.

காலப் போக்கில், பதவிகள் கிட்டாமல் போனதும், அவருடைய உண்மைத் தன்மையை உணர்ந்த மக்கள் அவரது உபதேசங்களையும் வழிகாட்டல்களையும் ஒதுக்கிவிடத் தயாரானதும், மகாப் பெரியவருக்கு ஆத்திரமும் ஆவேசமும் 6J#) Li L-i -.

‘மக்களுக்கு புத்தி புகட்டுவோம். மக்களின் மதிப்பைப் பெற்றிருப்பவர்களை ஒழித்துக் கட்டுவோம். அதற்காக ஒரு தனிக்கட்சி அமைப்போம்! என்று திட்டமிட்டார் அவர்.

கட்சி பிறந்தது. பக்தர்கள் கூடினர். அவர் தயவினால் சுயலாபம் பெற ஆசைப்பட்ட பணமூட்டைகள் அவர்கட்சிக்கு முட்டுக்கொடுக்க முன்வந்தன.

எல்லாவற்றையும் சமமாக மதிக்கும் ஞானம் பெற்றவர் என விளம்பரப்படுத்தப்பட்ட பெரியவர் மக்கள் நம்பிக்கைக் கட்சியினரை மோசமாணவர்கள் என்று கண்டித்துப் பேசுவ திலும் எழுதுவதிலும் தமது ஆற்றலையும் காலத்தையும் செலவிடலானார்.

எல்லோரது கவனத்தையும் கவருவதற்காக எல்லா விஷயங்களைப் பற்றியும் எப்போதும் அறிக்கைகள் விடுவதில் ஆர்வம் காட்டினார். காதல் முதல் கருத்தடை வரை, விலை உயர்வு முதல் அயலார் உறவு வரை இப்படி என்னென்ன விவகாரங்கள் உண்டோ அவை பற்றி எல்லாம் ஆர் கருத்தை உலகத்தினர் அறியாமல் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு